இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்காதது குறித்து மனம்திறந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தரம்சாலா நகரில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நூறாவது போட்டியிலும் விளையாடி சாதனை நிகழ்த்த இருக்கிறார்.

ஏற்கனவே அணில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக இருக்கும் அஸ்வின் விரைவில் அவரை நெருங்க கூட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரம்சாலா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துகொண்டு பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அப்போது அவர் பேசியதாவது : என்னிடம் வந்து நிறைய பேர் உங்களுக்கு ஏன் இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை? என்று பேசியிருக்கிறார்கள். எனக்கு வந்த ஏற்றத்தாழ்வுகள் நிறைய புரிதலை எனக்குள் உருவாக்கியிருக்கிறது. சில சூழ்நிலைகளை நான் புரிந்து கொண்டு சமாதானம் செய்து கொண்டு விட்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக பேட்மேன்களுக்கு அடுத்த இடத்தில் பந்துவீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள். எனக்கு முக்கியமான நேரங்களில் அணியில் வாய்ப்பு கிடைக்காத பொழுது எல்லாம் அணியின் நன்மைக்காக தான் என்று எடுத்துக் கொள்வேன்.

- Advertisement -

நான் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் ஐந்து நாட்கள் முடிவில் அணி வெற்றி பெற்று இருந்தால் ட்ரெஸ்ஸிங் ரூமில் நானும் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தை விட அணியின் வெற்றி தான் முக்கியம் என்பதனால் நான் எதையும் பெரிது படுத்த முடியாது. கேப்டன்சியை விட அணியின் வெற்றி தான் முக்கியம் என அஸ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் நடைபெறும் அழகான தரம்சாலா மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

தற்போது 37 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகமாகி 99 போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுதவிர்த்து பேட்டிங்கிலும் 5 சதம் மற்றும் 14 அரைசதம் என 3309 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement