இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் நடைபெறும் அழகான தரம்சாலா மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் இதுவரை நடந்த 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது. அதனால் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நடைபெறும் கடைசி போட்டியில் வென்று 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதற்கு இங்கிலாந்தும் போராட உள்ளன.

- Advertisement -

தரம்சாலா மைதானம்:
அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி மார்ச் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அழகான தரம்சாலா நடைபெற உள்ளது. பனிமழை சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் 23000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இமைதானத்தில் வரலாற்றில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. கடந்த 2017இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்து 3 நாட்களில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தனர். இங்கு அதிக ரன்கள் (128) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (111) அடித்த வீரராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் இருக்கிறார். அதே போல அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களாக நேத்தன் லயன் மற்றும் உமேஷ் யாதவ் (தலா 5) முதலிடத்தில் உள்ளனர். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா 332, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2017

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
தர்மசாலா நகரில் குறைவான வெப்பத்துடன் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. மேலும் முதல் மற்றும் கடைசி நாட்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும் மழையால் பெரிய பாதிப்பு இல்லை என்று தெரிய வருவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
மற்ற இந்திய மைதானங்களைப் போலவே தரம்சாலா மைதானமும் முதல் 2 நாட்களில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுடன் பேட்டிங் சாதகமாக இருக்கும். எனவே அதை பயன்படுத்தி சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம். அதே சமயம் குளிரான வானிலை நிலவும் என்பதால் ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 2 நாட்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் 3வது நாளிலிருந்து ஸ்பின்னர்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்து போட்டியின் முடிவை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். இந்த மைதானத்தில் 300, 332, 137, 106 என்பது சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement