- Advertisement -
ஐ.பி.எல்

இதான் வாழ்க்கை.. ஏற்கனவே பலரை பாத்துருக்கேன்.. மும்பை அணியில் நிகழ்ந்த அவமானம் பற்றி ரோஹித் சர்மா

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது. கடந்த 2008 – 2012 வரையிலான காலகட்டங்களில் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பைக்கு 2013இல் ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

அவருடைய தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த மும்பை குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்றது. அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளார். அதே போல சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் உட்பட நிறைய உலக சாதனைகளை படைத்துள்ள அவர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

- Advertisement -

இது தான் வாழ்க்கை:
ஆனால் அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் குஜராத்திடமிருந்து ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி புதிய கேப்டனாக அறிவித்தது. மறுபுறம் பதவி கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே சீனியர் என்றும் பாராமல் ரோகித்தை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தி அவமானப்படுத்தியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

இந்நிலையில் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் அனைத்தும் அனைத்து நேரங்களிலும் உங்களுக்கு சாதகமாக செல்லாது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது தான் வாழ்க்கை என்று தெரிவிக்கும் அவர் இதற்கு முன் தோனி, சச்சின், பாண்டிங் போன்ற பலரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடியுள்ளதாக கூறியுள்ளார். எனவே பாண்டியா தலைமையில் விளையாடுவதில் தமக்கு எந்த அவமானமும் இல்லை என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது வாழ்க்கையின் அங்கமாகும். இங்கே அனைத்தும் உங்களது வழியில் செல்லாது. இது சிறப்பான அனுபவமாகும். இதற்கு முன்பும் நான் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். எனவே இது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது. உங்களுக்கு முன் என்ன நடக்கிறதோ அதனுடன் சேர்ந்து நீங்கள் செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: ரிவியூ ஜெயிச்சாலும் தோல்வி தான்.. இந்த யூஸ்லெஸ் ரூல்ஸை பேஸ்பால் மாதிரி மாத்துங்க.. டேல் ஸ்டைன் ஐடியா

“ஒரு வீரராக உங்களிடம் என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய வேண்டும். அதையே நான் கடந்த ஒன்றரை மாதமாக செய்ய முயற்சித்து வருகிறேன்” என்று கூறினார். இந்த நிலைமையில் புதிய கேப்டன் பாண்டியா தலைமையில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு தடுமாறும் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாக காணப்படுவது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -