பாண்டியா வேணாம்.. 2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு அவர் தான் கேப்டனா இருக்கணும்.. ஜஹீர் கான் கோரிக்கை

Zaheer Khan
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லீக் மற்றும் செமி ஃபைனலில் தோல்வியை சந்திக்காத அணியாக 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

- Advertisement -

பாண்டியா வேண்டாம்:
அத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், பும்ரா ஆகியோர் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் சூரியகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் 2022 டி20 உலகக் கோப்பை தோல்வியால் ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் புதிய இளம் அணியை களமிறக்கும் வேலையை பிசிசிஐ கடந்த வருடமே துவங்கியது.

அதனால் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் தோல்வியை பதிவு செய்ததால் 2024 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா என்பது கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையிலும் ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று ஜாம்பவான் ஜாகிர் கான் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டி20 உலகக் கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதில் நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்தியாவை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”

இதையும் படிங்க: 2023 உ.கோ தோல்விக்கு இந்திய பிளேயர்ஸ் காரணமில்ல.. நீங்க 2 பேர் தான் காரணம்.. வாசிம் அக்ரம் விளாசல்

“நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் அதற்கு முன்பாக பாண்டியா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார் என்பது பின்னடைவாகவே இருக்கும்” என்று கூறினார்.

Advertisement