டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஜெயிக்க அவர் தான் விக்கெட் கீப்பரா விளையாடனும் – ரோஹித்துக்கு கவாஸ்கர் ஆலோசனை

Gavaskar
- Advertisement -

வரலாற்றின் 2வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்ற லீக் சுற்றின் முடிவில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த முறை இதே இங்கிலாந்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஃபைனலில் நியூசிலாந்திடம் வழக்கம் போல சொதப்பிய இந்தியா கோப்பையை கோட்டை விட்டது. எனவே இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்லும் முயற்சியுடன் களமிறங்கும் இந்தியாவுக்கு விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட் காயத்தால் பங்கேற்க மாட்டார் என்பது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

KS Bharat 1

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஸ்விங் ஆகக்கூடிய வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளைக் கொண்ட இங்கிலாந்து மண்ணில் 2 சதங்களை அடித்து தோனியால் படைக்க முடியாத சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். ஆனால் அவர் காயத்தால் பங்கேற்க முடியாது என்ற நிலையில் அவரது இடத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் பிறந்து வளர்ந்து விளையாட பழகிய இந்திய மண்ணில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டார்.

கவாஸ்கர் ஆலோசனை:
எனவே வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து சூழ்நிலைகளில் நிச்சயமாக அவர் அசத்துவதற்கு வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையில் ஃபைனலில் கோப்பையை வெல்வதற்கு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவது நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று சமீபத்தில் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார். ஏனெனில் 2021ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 2018 சுற்றுப்பயணத்தில் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் மிடில் ஆர்டரில் சதமடித்து 149 ரன்கள் குவித்து அசத்திய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

Dinesh-Karthik-and-KL-Rahul

எனவே தற்போது ஃபார்மின்றி தவிக்கும் அவர் தொடக்க வீரராக அல்லாமல் விக்கெட் கீப்பராக விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய பயனை கொடுக்கும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கூறுவது சரிதான் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா போல இங்கிலாந்தில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்காது என்பதால் விக்கெட் கீப்பிங் செய்வதற்காக மட்டும் கேஎஸ் பரத் விளையாட கூடாது என்று தெரிவித்துள்ளார். எனவே கோப்பையை வெல்ல அவரது இடத்தில் கேஎல் ராகுல் விளையாட வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுலை நீங்கள் விக்கெட் கீப்பராக பார்க்கலாம். ஒருவேளை அவர் ஓவல் மைதானத்தில் 5 அல்லது 6வது இடத்தில் விளையாடுவது நம்முடைய பேட்டிங்கின் பலத்தை அதிகரிக்கும். ஏனெனில் கடந்த வருடம் அவர் இங்கிலாந்தில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் அவர் சதமடித்தார். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான 11 பேர் அணியை தேர்வு செய்யும் போது ராகுலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் விக்கெட் கீப்பராக செயல்படுவதில் உள்ள பிரச்சனை பற்றி தினேஷ் கார்த்திக் அழகாக எடுத்துரைத்தார்”

Sunil-gavaskar

“விக்கெட் கீப்பருக்கு உண்மையான சோதனை சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் தான் காத்திருக்கும். எடுத்துக்காட்டாக 4வது போட்டியில் டிராவிஸ் ஹெட் போல்ட்டான பந்து திரும்பி ஸ்டம்பை தாக்கிய போது கேஎஸ் பரத் கையுறைகள் பந்துக்கு அருகில் இல்லை. அதாவது அப்போது பந்து ஸ்டம்பில் அடிக்காமல் போயிருந்தால் இந்தியாவுக்கு 4 ரன்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்”

இதையும் படிங்க:IND vs AUS : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

“எனவே இங்கிலாந்தில் பிட்ச் இது போல சுழலாது என்பதால் விக்கெட் கீப்பர்கள் அதிகம் ஸ்டம்ப்புகளுக்கு அருகே நிற்க வேண்டியதில்லை. அதன் காரணமாக நீங்கள் விக்கெட் கீப்பராக ராகுலை தேர்வு செய்யலாம். இஷான் கிஷனையும் கணக்கில் கொள்ளலாம். அவர்களுடைய பேட்டிங் பரத்தை விட சிறப்பாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement