IND vs AUS : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

IND-vs-AUS
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரினை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியானது அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த தொடரில் இருந்தே இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்கும் என்பதனால் இந்த ஒருநாள் தொடரானது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் சர்மா விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளதால் முதல் போட்டியில் மட்டும் ஹார்டிக் பாண்டியா கேப்டனா செயல்படுவார் என்றும் அதன் பின்னர் மீண்டும் ரோகித் சர்மா அணிக்கு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காயத்திலிருந்து விலகியுள்ள ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளார். அதுமட்டும் இன்றி திருமணம் காரணமாக கடந்த நியூசிலாந்து தொடரை தவறவிட்ட கே.எல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர். அதுதவிர்த்து மேலும் பல இளம் வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாட இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

starsport

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்தெந்த தேதிகளில் போட்டி நடைபெறுகிறது? எந்தெந்த மைதானத்தில் நடைபெறுகிறது? எந்த சேனலில் இந்த போட்டியை கண்டு ரசிக்கலாம்? என்பது குறித்து தெளிவான தகவலை இந்த பதிவில் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி மார்ச் 17-ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. அதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டியானது மார்ச் 19-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியும் மதியம் 1:30 மணிக்கு துவங்குகிறது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழுலிஸ்ட் இதோ

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் அவர்களே இந்த ஒருநாள் தொடரை ஒளிபரப்பு செய்வார்கள். அதுமட்டும் இன்றி போட்டியை ஆன்லைனில் காண விரும்புவோர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலம் போட்டியை கண்டு ரசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement