IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழுலிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான போட்டிகள் மார்ச் 17-ஆம் தேதி மும்பையில் துவங்கி மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த மூன்று போட்டிகளுக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா முதல் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா முதல் போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று காயம் காரணமாக பல மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரவிந்திர ஜடேஜா ஒருநாள் தொடருக்கான அணியில் களமிறங்க உள்ளார். நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை தவறவிட்ட கே.எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இந்த தொடரில் இடம் பிடித்துள்ளனர்.

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul

அதுமட்டும் இன்றி ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்த கே.எஸ் பரத் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோர் இம்முறை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து அகமதாபாத் டெஸ்டின் போது முதுகு வலியால் பாதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் மருத்துவ ஆலோசனையில் இருந்து வருவதால் அவர் ஒருநாள் தொடருக்கான அணியில் பெற்றிருந்தாலும் அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அப்படி அவர் ஒருவேளை வெளியேற்றப்பட்டால் அவருக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs AUS : ஒருநாள் தொடரில் பட் கமின்ஸ் திரும்புகிறாரா? கேப்டன் யார் – ஆஸி கோச் மெக்டொனால்ட் வெளியிட்ட அறிவிப்பு இதோ

1) ரோகித் சர்மா, 2) விராட் கோலி, 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) கே.எல் ராகுல், 6) இஷான் கிஷன், 7) ஹார்டிக் பாண்டியா, 8) ரவீந்திர ஜடேஜா, 9) குல்தீப் யாதவ், 10) வாஷிங்டன் சுந்தர், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) முகமது ஷமி, 13) முகமது சிராஜ், 14) உம்ரான் மாலிக், 15) ஷர்துல் தாக்கூர், 16) அக்சர் பட்டேல், 17) ஜெய்தேவ் உனட்கட்.

Advertisement