IND vs AUS : ஒருநாள் தொடரில் பட் கமின்ஸ் திரும்புகிறாரா? கேப்டன் யார் – ஆஸி கோச் மெக்டொனால்ட் வெளியிட்ட அறிவிப்பு இதோ

australia
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து 2004க்குப்பின் இந்திய மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டது. அதை விட கேப்டன் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் வீரர்கள் விலகியதால் 4 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்து 3வது போட்டியில் அபார வெற்றி பெற்று ஒய்ட் வாஷ் அவமான தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தது.

அதை விட 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்த அந்த அணி அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியாவை வெற்றி பெற விடாமல் ட்ரா செய்து இத்தொடரில் ஏமாற்றத்தை சந்தித்தாலும் திருப்திகரமாக நிறைவு செய்தது. மறுபுறம் கிரிக்கெட்டின் அசுரனான ஆஸ்திரேலியாவை 2017, 2018/19, 2020/21, 2023* என அடுத்தடுத்த தொடர்களில் தோற்கடித்து 4 அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்ற முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற்றது.

- Advertisement -

கேப்டன் யார்:
அதனால் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதற்கு முன்பாக மார்ச் 17 முதல் இவ்விரு அணிகள் மோதும் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. முன்னதாக டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முடித்துக் கொண்டு உடல்நிலை சரியில்லாத தனது குடும்பத்தை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா கேப்டன் பட் கமின்ஸ் நாடு திரும்பினார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது தாயார் இயற்கை எய்தியதால் ரசிகர்களும் வீரர்களும் சோகமடைந்து ஆறுதல் தெரிவித்தனர்.
அதனால் ஒருநாள் தொடரில் அவர் கேப்டனாக செயல்படுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் வாழ்வின் பெரிய துயரை சந்தித்துள்ள பட் கமின்ஸ் இத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவித்துள்ள ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி டெஸ்ட் தொடருக்கு பின் அவர் கொடுத்த பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“பட் கமின்ஸ் இத்தொடருக்காக வரப்போவதில்லை. அவர் தன்னுடைய வீட்டில் நடந்த சூழ்நிலைகளை கவனித்துக் கொள்வார். நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவும் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதலும் தெரிவித்து உறுதுணையாக இருந்து வருகிறோம். எனவே இத்தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார். தற்சமயத்தில் சமநிலையுடன் இருப்பதற்கு தேவையான அணியை உருவாக்குவதைப் பற்றி நாங்கள் சில பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். குறிப்பாக பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க 8 பேட்ஸ்மேன்களை இத்தொடரில் பயன்படுத்த முயற்சிக்க உள்ளோம்”

- Advertisement -

“எனவே உலக கோப்பையை கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல் நாங்கள் அணியை அவர்களை இத்தொடரில் பயன்படுத்த உள்ளோம். மேலும் நிறைய ஆல் ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்கள் அனைவரும் ஒரு அணியில் விளையாட வேண்டும் என்பதால் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது” என்று கூறினார். முன்னதாக டெஸ்ட் தொடரில் காயமடைந்து வெளியேறிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தற்போது அதிலிருந்து குணமடைந்து இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று தெரிவித்துள்ள அவர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அஸ்டன் அகர் விளையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எல்லாரும் வராங்க உங்களுக்கு மட்டும் என்ன – நாங்களும் பழி உங்க மீது போடவா? இந்தியாவை மீண்டும் எச்சரிக்கும் நஜாம் சேதி

இதை தொடர்ந்து வரும் மார்ச் 17, 19, 22 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement