எல்லாரும் வராங்க உங்களுக்கு மட்டும் என்ன – நாங்களும் பழி உங்க மீது போடவா? இந்தியாவை மீண்டும் எச்சரிக்கும் நஜாம் சேதி

Jay Shah Najam Sethi
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. இருப்பினும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அரசின் அனுமதியின்றி 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா பயணிக்காது என்று தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் எங்களிடம் கேட்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் உங்களது நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து தங்களது தரமான பாகிஸ்தான் அணி பங்கேற்காமல் போனால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று விமர்சித்த ரமீஸ் ராஜாவுக்கு பின் அந்நாட்டின் புதிய வாரிய தலைவராக நஜாம் சேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பக்ரைனில் நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரத்தை முன்வைத்தும் அதற்கு பிடி கொடுக்காத ஜெய் ஷா இது பற்றிய இறுதி முடிவை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைத்தார்.

- Advertisement -

மீண்டும் எச்சரிக்கை:
அதனால் கடுப்பான நஜாம் சேதி எங்களது நாட்டுக்கு நீங்கள் வரவில்லை என்றால் உங்களது நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என்று நேரடியாக ஜெய் ஷா’விடம் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் தங்களது நாட்டுக்கு வந்து விளையாடும் நிலையில் உங்களுக்கு மட்டும் பாதுகாப்பு பற்றி என்ன பிரச்சனை? என்று இந்தியாவிடம் நஜாம் சேதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்படி குறை இல்லாத போதும் பாதுகாப்பை காரணமாக காட்டுவது போல் நாங்களும் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை உருவாக்கி உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என்றும் அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. ” எங்களிடம் சிக்கலான சிக்கல்கள் உள்ளன. ஆனால் என்னை பொறுத்த வரை நான் ஆசிய மற்றும் ஐசிசி கூட்டங்களுக்கு செல்லும் போது எங்களுடைய எல்லா விருப்பங்களையும் குறைகளையும் உறுப்பு நாடுகளிடம் எடுத்து வைக்க உள்ளேன். இது தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரமாகும். நான் என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாத காரணத்தால் வெளிநாடுகள் வந்து விளையாடுகின்றன. அப்படி இருக்க இந்தியா மட்டும் ஏன் பாகிஸ்தானில் இருக்கும் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறது”

- Advertisement -

“இதே வழியில் நாங்களும் இந்தியாவின் நடைபெறும் உலகக் கோப்பைக்காக எங்களது அணியை அனுப்புவது குறித்து இந்தியாவின் நிலவும் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளை உருவாக்குவோம். எனவே வரும் கூட்டங்களில் இதை நான் உறுப்பு நாடுகளிடம் முன் எடுத்து வைக்க உள்ளேன். ஏனெனில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கவில்லை. காரணம் இது ஆசிய மற்றும் உலக கோப்பையை மட்டும் பொருத்ததல்ல. மாறாக 2025இல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்ததாகும். இதைப் பற்றி அரசிடம் விவாதித்து சூழ்நிலைகளை ஆராய்ந்து அவர்களது அறிவுரைப்படி நான் செயல்பட உள்ளேன்”

“ஒருவேளை ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா வரவில்லை என்றாலும் உலகக் கோப்பையில் பங்கேற்க நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று அதிபர் கூறினால் எங்களால் என்ன செய்ய முடியும்? ஒருவேளை அவர் செல்லாதீர்கள் என்று சொன்னாலும் இதே போன்ற நிலைமை ஏற்படும். எனவே இவை அனைத்தையும் நாங்கள் அடுத்து வரும் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அப்பா இறந்த போது ரூமில் அழுதேன், 5 விக்கெட் எடுப்பேன்னு கோச் சொன்ன மாதிரியே நடந்துச்சு – சிராஜ் நெகிழ்ச்சி பேட்டி

இம்மாத இறுதியில் ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பற்றி விவாதித்து தங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க உள்ளதாக நஜாம் சேதி கூறியுள்ளார்.

Advertisement