ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட ரோஹித். கேப்டன் பேட்சை மதிக்காம என்ன பண்றாரு பாருங்க

Khawaja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று முடிந்த வேளையில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த போட்டியின் போது முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 61 ரன்களை குவித்தனர். அப்போது 32 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அடுத்ததாக மார்னஸ் லாபுஷேன் 3 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர் ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்களும், பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் 17 ரன்களும் குவித்தனர். இறுதியாக கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மேலும் விக்கெட்டுகள் சரியாமல் முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அடுத்ததாக உள்ளே வந்த பீட்டர் ஹேன்ஸ்கோம்பை விரைவிலேயே வீழ்த்துவதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருபுறமும் சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைத்து ஷ்ரேயாஸ் ஐயரை சில்லி பாயிண்ட்டில் நிக்க வைத்தார். அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் பீட்டர் ஹேன்ஸ்கோம்பிற்கு அருகில் சில்லி பாயிண்டில் ஷ்ரேயாஸ் ஐயரை ஒரு குறிப்பிட்ட இடத்தில நிற்க வைத்த ரோகித் சர்மா அவரின் இடுப்பை பிடித்து இங்கே நில் என்று கூறிவிட்டு சென்றார். அவர் நகர்ந்து சென்ற சிறிது நேரத்திலேயே ஷ்ரேயாஸ் ஐயர் அங்கிருந்து சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து நின்று கொண்டார்.

இதையும் படிங்க : IND vs AUS : அவ்ளோ பசி – லன்ச் விடுவதற்குள் ஸ்கூல் பையனை போல நடந்து கொண்ட விராட் கோலி – வைரல் வீடியோ

இதனை கவனித்த வர்ணனையாளர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தும், கால்களில் பேடு இருந்தும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஜாக்கிரதையாக இருக்கிறார் என நகைச்சுவையாக வர்ணித்தனர். இந்த நிகழ்வு பார்ப்பதற்கும் நகைச்சுவையாகவே இருந்தது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement