IND vs AUS : அவ்ளோ பசி – லன்ச் விடுவதற்குள் ஸ்கூல் பையனை போல நடந்து கொண்ட விராட் கோலி – வைரல் வீடியோ

Virat kohli Chocholate
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 3 போட்டிகளில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றினாலும் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 255/4 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணிக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 3, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸகோப் 17 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 15 பவுண்டரியுடன் சதமடித்து 104* (251) ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

லன்ச் விடுவதற்குள்:
அவருடன் 5வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வரும் கேமரூன் கிரீன் 49* ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக இதுவரை சமி 2* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முன்னதாக இந்த போட்டியில் 22 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில் உணவு இடைவெளிக்கு 8 ஓவர்கள் மீதமிருந்தது. அப்போது 23வது ஓவர் மாற்றும் இடைவெளியில் ஸ்லிப் பகுதிகளில் நின்று கொண்டிருந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது அதிகப்படியான பசியை போக்குவதற்காக பாக்கெட்டில் வைத்திருந்த டைரி மில்க் போன்ற சாக்லேட்டை எடுத்து ருசி பார்த்தார்.

ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்ஷேன் பந்தை எதிர்கொள்வதற்காக தயாரான போது பின்புலத்தில் அவர் செய்த இந்த பள்ளி குழந்தையைப் போன்ற செயல் கேமராவில் பதிவானது. ஏனெனில் பொதுவாகவே பள்ளிகளில் இளம் வயது மாணவர்கள் தான் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே அதிகப்படியான பசி எடுத்தால் அதை கட்டுப்படுத்த முடியாமல் டிபன் பாக்ஸை திறந்து மதிய உணவை லேசாக சுவைத்து விடுவார்கள். அதே போல் சாக்லேட்டை சாப்பிட்ட விராட் கோலி முதல் பந்தை முகமது ஷமி வீசும் போது அதை தனது பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

- Advertisement -

பின்னர் 2வது பந்து வீசுவதற்கு முன்பாக பாக்கெட்டிலிருந்து எடுத்து சாப்பிட்ட அவர் மீதி சாக்லேட்டை பக்கத்தில் இருக்கும் நண்பனுக்கும் கொடுப்பது போல அருகிலிருந்த ஸ்ரேயாஸ் ஐயரிடம் பகிர்ந்து சாப்பிடுமாறு தூக்கி போட்டார். அதை கேட்ச் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் பின்பு சாப்பிட்டுக்கொள்கிறேன் என்ற வகையில் தனது பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அப்படி சாக்லேட்டை விராட் கோலி சுவைத்த அதே ஓவரின் அடுத்த சில பந்துகளில் மார்னஸ் லபுஸ்ஷேன் ஷமியின் வேகத்தில் கிளீன் போல்டானார்.

மொத்தத்தில் உணவு இடைவெளி வருவதற்கு 10 – 15 நிமிடங்கள் இருந்த போதும் பசியை கட்டுப்படுத்த முடியாமல் விராட் கோலி சாக்லேட் சாப்பிட்ட இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இத்தொடரில் நாக்பூர், டெல்லி, இந்தூர் ஆகிய கிரிக்கெட் மைதானங்களில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால் முதல் 3 போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிந்தன.

இதையும் படிங்க:ஐ.சி.சி வெளியிட்ட புதிய டெஸ்ட் பவுலர் ரேங்கிங். முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட – தமிழக வீரர் அஷ்வின்

ஆனால் அகமதாபாத் மைதானத்தில் பிட்ச் ஓரளவு பிளாட்டாக இருப்பதாலேயே முதல் நாளில் ஆஸ்திரேலியா நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி 255/4 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த போட்டி முழுமையான 5 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement