ஐ.சி.சி வெளியிட்ட புதிய டெஸ்ட் பவுலர் ரேங்கிங். முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட – தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களின் இடையே வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கடந்த வாரம் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தனது முதல் இடத்தை இழக்கும் அபாயத்திற்கு வந்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே அஷ்வின் வீழ்த்தியதால் 6 புள்ளிகளை இழந்த அவர் தற்போது 859 புள்ளிகளுடன் இருக்கிறார்.

அதே வேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது முதல் இடத்தை அஸ்வினிடம் இழந்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது அதே 859 புள்ளிகளுடன் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் அஸ்வினுடன் முதல் இடத்தை பகிர்ந்து உள்ளார்.

James-Anderson

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டில் அஷ்வின் சிறப்பாக செயல்பட்டால் முதலிடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பந்துவீச்சில் சொதப்பினால் அவர் பின்னடைவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. அதேபோன்று இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

மேலும் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடா நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி சார்பாக அஷ்வினை தவிர்த்து மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா எட்டாவது இடத்தில் இருக்கிறார். அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : 13 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய – உஸ்மான் கவாஜா

பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜா ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement