எனக்கு ரஹானே வேணாம்.. அந்த பையன் தான் வேணும்.. அடம்பிடித்து தேர்வு செய்த – ரோஹித் சர்மா

Rohit-and-Rahane
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரினை முடித்த கையோடு இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அதன்படி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தனித்தனி கேப்டன்களுக்கு கீழ் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டு அந்த டெஸ்ட் அணியும் தனியே அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பெறாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அதேவேளையில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரகானே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரோகித் சர்மா எடுத்த ஒரு முக்கிய முடிவு தான் காரணம் என்பது போன்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ரகானே இனி டெஸ்ட் அணியில் வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுக்குழுவினரிடம் கேப்டன் ரோஹித் சர்மா தான் கேட்டுக் கொண்டாராம். அதன் காரணமாகவே துணை கேப்டனான ரகானே வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அந்த இடத்திற்கு ஷ்ரேயாஸ் வந்துள்ளார்.

இதையும் படிங்க : இன்னும் 19 ரன்கள் போதும்.. விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ருதுராஜ் கெய்க்வாட்

ஏற்கனவே ஒருநாள் அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரராக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித்தின் நம்பிக்கைக்கு உரிய வீரராக இருப்பதனால் அவரை ரோஹித் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று டெஸ்ட் அணியிலிருந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட ரஹானேவிற்கு இந்திய ஏ அணியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement