SRH vs MI : புதிய மைல்கல் தொட்ட ஹிட்மேன் ரோஹித் சர்மா – அதிரடி பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவித்த மும்பை

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா – இசான் கிசான் ஜோடி 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் 6 பவுண்டரியுடன் 28 (18) ரன்கள் குவித்து அச்சுறுத்தலை கொடுத்த ரோஹித் சர்மா தமிழக வீரர் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அடுத்து வந்த கேமரூன் கிரீன் அதிரடியாக செயல்பட்ட போதிலும் மறுபுறம் சற்று மெதுவாக விளையாடிய இசான் கிசான் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 1 சிக்சரை அடித்தாலும் 7 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனாலும் அடுத்து களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மா பயமறியாத காளையாக சீறிப் பாய்ந்து 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37 (17) ரன்களை விளாசி குவித்து கேமரூன் கிரீனுடன் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
இறுதியில் டிம் டேவிட் 2 பவுண்டரியுடன் 16 (11) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து ஹைதராபாத் பவலர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடிய கேமரூன் அரை சதமடித்து 6 பவுண்டர் 2 சிக்சருடன் 64* (40) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் மும்பை 192/5 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை விட இந்த போட்டியில் எடுத்த 28 (18) ரன்களையும் சேர்த்து ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 6000 ரன்கள் எடுத்த 4வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 6844
2. ஷிகர் தவான் : 6477
3. டேவிட் வார்னர் : 6109
4. ரோஹித் சர்மா : 6014*
5. சுரேஷ் ரெய்னா : 5528

- Advertisement -

அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்த 3வது வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. டேவிட் வார்னர் : 4285 பந்துகள்
2. விராட் கோலி : 4595 பந்துகள்
3. ரோஹித் சர்மா : 4616* பந்துகள்
4. ஷிகர் தவான் : 4738 பந்துகள்

கடந்த வருடம் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தில் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களையும் சந்தித்த அவர் இந்த சீசனில் ஒரு வழியாக அரை சதமடித்து ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவருடைய சாதனை பட்டியலில் தற்போது இந்த சாதனையும் மற்றும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : எல்லாரும் வீரர்களை தேடுறாங்க, ஆனா தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குறாரு – முன்னாள் வீரர் பாராட்டு, காரணம் இதோ

தற்போது இந்த சாதனை படைத்துள்ள அவர் அதன் காரணமாகவே இந்த சீசனில் 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள மும்பை 6வது கோப்பையை வென்று கடந்த வருடம் சந்தித்த மோசமான தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்து தங்களுடைய ரசிகர்களை மீண்டும் புத்துணர்ச்சி அடைய வைக்க போராடி வருகிறது.

Advertisement