
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்களுக்கு சுருண்டது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களுடன் இருந்தது. இன்னும் 394 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கும் இந்திய அணியானது இந்த சரிவிலிருந்து எவ்வாறு மீளப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதோடு இந்த போட்டியின் முடிவு என்ன ஆகப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை கடுமையாக சாடிய ஒரு விவகாரம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இன்றைய போட்டியின் போது 114-வது வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பந்தை மைதானத்தில் இருந்து வெளியே வீசினார். இதனைக் கண்ட ரோஹித் சர்மா கடும் கோபத்தில் அவரை கடுமையாக சாடினார். வேகப்பந்து வீச்சாளராக இருந்து தொடர்ந்து ஓவர்களை வீசும்போது வியர்வை காரணமாக பந்து வழிக்கு செல்வது சகஜமான ஒன்றுதான்.
ஆனால் அதனை பொறுத்துக் கொள்ளாத ரோகித் சர்மா ஆகாஷ் தீப்பை பார்த்து உன் தலையில் ஏதாவது இருக்கிறதா? என கைகளை காட்டி சத்தமாக திட்டினார். இந்த விடயம் மைதானத்தில் இருந்த மைக்கிலும் தெளிவாக பதிவானது. அதோடு ரோஹித் சர்மா அவரை திட்டிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : எங்களது அணிக்குள் அந்த பாகுபாடு எல்லாம் கிடையாது.. எல்லாருமே ஒன்னு தான் – பும்ரா பெருந்தன்மை
ரோகித்தின் இந்த செயல் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. ஏனெனில் ஒரு கேப்டனாக பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு தரவேண்டிய ஒருவர் இப்படி பொதுவெளியில் கேமராக்கள் முன் திட்டுவது தேவையில்லாத ஒன்று என்று ரசிகர்கள் அவரது இந்த செயலை கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.