IND vs NZ : இஷான் கிஷன் ஓப்பனிங் ஆட மாட்டாரு. அவரோட பொசிஷன் இதுதான் – ரோஹித் சர்மா அறிவிப்பு

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நாளை ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருவதால் நாளைய போட்டியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

ஏனெனில் இலங்கை தொடரில் விளையாடிய கே.எல் ராகுல் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயரும் இன்று முதுகு வலி காரணமாக வெளியேறி உள்ளதால் அவர்கள் இருவருக்கு பதிலாக இரண்டு வீரர்கள் இடம் பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Ishan-Kishan

அந்த வகையில் விக்கெட் கீப்பரான கே.எல் ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் விளையாடப்போவது உறுதி. மேலும் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை சூரியகுமார் யாதவ் பூர்த்தி செய்வார் என்று தெரிகிறது. இருப்பினும் ஏற்கனவே அணியில் சுப்மன் கில் இருப்பதால் துவக்க வீரரான இஷான் கிஷன் எப்படி கே.எல் ராகுலின் இடத்தில் விளையாட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது கருத்தினை முன் வைத்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாளைய போட்டியில் சுப்மன் கில் தான் என்னுடன் துவக்க வீரராக களம் இறங்குவார். அதே வேளையில் இஷான் கிஷன் மிடில் ஆடரில் தான் பேட்டிங் செய்வார். நிச்சயம் அவரால் மிடில் ஆடரிலும் ரன்களை குவிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : சரிந்த மும்பையை தனி ஒருவனாக தூக்கிய சர்ப்ராஸ் கான், தேர்வுக்குழுவுக்கு சவுக்கடி – வைரலாகும் கோச் ரியாக்சன்

நிச்சயம் இந்த சவாலை ஏற்று அவர் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபிப்பார் என ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக நாளைய போட்டியிலும் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடியே துவக்க வீரர்களாகவும், இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் விளையாடுவார் என்பதும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement