IND vs PAK : ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது ஏன்? டாஸின் போதே விளக்கம் கொடுத்த – கேப்டன் ரோஹித் சர்மா

Rohith-1
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரானது துவங்கியது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsPAK

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து டாசின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை அளித்தார்.

Rishabh Pant 44

அதன்படி அவர் கூறுகையில் : நாங்கள் டாஸ் குறித்து பெரிதாக யோசிக்கவில்லை. நாங்கள் இங்கு தரமான கிரிக்கெட்டை விளையாட வந்துள்ளோம். ஏற்கனவே இங்கு ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளதால் இங்கு முதலில் பந்து வீச விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சாதனை படைத்த விராட் கோலியை வாழ்த்திய ரோஹித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் – 3 தெ.ஆ ஜாம்பவான்கள் பாராட்டி பேசியது இதோ

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம் தான் இருந்தாலும் இந்த போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். மேலும் மூன்றாவது பந்துவீச்சாளராக ஆவேஷ் கான் செயல்படுகிறார் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர் என்பது மட்டுமின்றி சமீபமாகவே பினிஷராக அசத்தி வருவதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement