IND vs WI : டொமெஸ்டிக் கிரிக்கெட்ல நாங்க அவரை நெறைய பாத்தது இல்ல. ஆனா சூப்பரா பவுலிங் பண்றாரு – ரோஹித் புகழாரம்

Rohit-and-Mukesh
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஜூலை 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

WI

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜூலை 29-ஆம் தேதி அதே பார்படாஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இவ்வேளையில் இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமாரை ரோகித் சர்மா பாராட்டியுள்ளதால் நிச்சயம் அவர் இரண்டாவது போட்டியிலும் விளையாடுவார் என்று உறுதியாகியுள்ளது.

Mukesh Kumar

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமான முகேஷ் குமார் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேளையில் அடுத்த ஏழு நாட்கள் இடைவெளியில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் முகமது சிராஜின் ஓய்வு காரணமாக அறிமுக வீரராக களம் இறங்கி விளையாடினார்.

- Advertisement -

இந்த போட்டியிலும் மிகச்சிறப்பாக பந்துவீசிய அவர் ஒரு விக்கெட்டை போட்டியின் துவக்கத்திலேயே வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா பேசுகையில் : முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசுகிறார். அவரால் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்ய முடிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : ஃப்ளைட்ல ஏறி வீட்டுக்கு போங்க, 2012 சம்பவத்துக்கு பொல்லார்ட் மாஸ் பதிலடி – காலில் விழுந்த ப்ராவோ

அவரிடம் இருந்து இது போன்ற ஒரு செயலை பார்க்கும்போது மிகச்சிறப்பாக இருக்கிறது. நாங்கள் பெரிதாக முகேஷ் குமாரை டொமஸ்டிக் கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை. ஆனால் இந்த அயல்நாட்டு மண்ணிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருப்பதை பார்ப்பதற்கு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement