ஷாஹீன் அப்ரிடியை ஆசிய கோப்பையில் சமாளிக்க ரோஹித் எடுத்துள்ள புதிய பயிற்சி – விவரம் இதோ

Shaheen-and-Rohit
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டியானது கண்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. உலகின் தலைசிறந்த இரு அணிகளாக விளங்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

Rohit

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக களமிறங்க இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்களின் தடுமாற்றம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

குறிப்பாக 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் முகமது அமீர், 2019-ஆம் ஆண்டு உலக கோப்பையில் ட்ரெண்ட் போல்ட், 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஷாகின் அப்ரிடி என இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக சோபிக்க தவறியதால் இம்முறை இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தங்களது திட்டங்களை இந்திய பேட்ஸ்மேன்கள் பலப்படுத்தி வருகின்றனர்.

shaheen afridi 1

அந்த வகையில் ஆலூரில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய வீரர்கள் இடதுகை பவுலர்களுக்கு எதிராக பேட்டிங் செய்யும் விதத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் வலைப்பயிற்சியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர். ரோகித் சர்மா இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் யாதெனில் :

- Advertisement -

ஷாகின் ஷா அப்ரிடிக்கு நல்ல பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும் என்பதனால் அவரை போன்றே பந்துவீசும் அனிகிட் சவுத்ரியை நெட் பவுலராக பந்து வீசவைத்து அவருக்கு எதிராக ரோகித் நேற்று பல மணி நேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளார். எப்பொழுதுமே இடது கை பந்துவீச்சாளர்களுக்கு சிறிய மூமென்ட் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சற்று திணறும் ரோகித் இம்முறை அனுகிட் சவுத்ரியை வைத்து பயிற்சி செய்ததன் காரணமே ஆசிய கோப்பையில் ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொள்வதற்காக தான் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியின் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து வெளியிட்ட மேத்யூ ஹைடன் – லிஸ்ட் இதோ

மேலும் உலகக்கோப்பை தொடரிலும் பல்வேறு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதினாலே இந்த தனித்துவமான பயிற்சியை ரோஹித் சர்மா மேற்கொண்டு வருகிறார். இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐசிசி கோப்பையை கைப்பற்றாத வேளையில் இந்தியாவில் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கிலேயே தற்போது இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement