இந்திய அணியின் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து வெளியிட்ட மேத்யூ ஹைடன் – லிஸ்ட் இதோ

Hayden
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருந்தது. ஆனால் அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. இந்நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இம்முறை இந்திய மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது.

Jasprit Bumrah India Jaiswal

- Advertisement -

அதனால் இந்தமுறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இவ்வேளையில் இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி தான் பெரும்பாலும் உலகக் கோப்பை தொடருக்கான அணியாகவும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இப்படி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

IND-vs-WI-1

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் எதிர்வரும் இந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள அணியில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் தேர்வுசெய்துள்ள அணியில் சஞ்சு சாம்சனுக்கு முதன்மை அணியில் இடம் கொடுத்து திலக் வர்மாவை வெளியேற்றியுள்ளார். மேலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை நீக்கியுள்ளார். அதன்படி மேத்யூ ஹைடன் வெளியிட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீமோட வீக்னஸ்ஸே அவருதான். அவருக்கு ஸ்பின் விளையாட தெரியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சஞ்சு சாம்சன், 6) கே.எல் ராகுல், 7) சூரியகுமார் யாதவ், 8) ரவீந்திர ஜடேஜா, 9) ஹார்டிக் பாண்டியா, 10) இஷான் கிஷன், 11) முகமது ஷமி, 12) ஷர்துல் தாகூர், 13) முகமது சிராஜ், 14) ஜஸ்ப்ரீத் பும்ரா, 15) அக்சர் படேல்.

Advertisement