- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டியர் ராகுல் பாய்.. உங்களை 2வது மனைவின்னு ரித்திகா சொல்வாங்க.. டிராவிட் பற்றி உருகிய ரோஹித் சர்மா

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடியது. அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே போல ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார். ஒரு வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக அவர் கடைசி முயற்சியில் வென்றது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

உருகிய ரோஹித்:
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக முதல் கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோஹித் சர்மா உருக்கமான வாழ்க்கையும் பாரட்டையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் ராகுல் டிராவிட் தான் உங்களுடைய மனைவி என்று தம்முடைய மனைவி ரித்திகா அடிக்கடி சொல்வார் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“டியர் ராகுல் பாய். இதைப் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் அதை சரியாக செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. எனவே என்னுடைய முயற்சி இதோ. என்னுடைய சிறு வயது நாட்களிலிருந்தே பல பில்லியன் ரசிகர்களைப் போல நானும் உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனால் அதையும் தாண்டி உங்களுடன் நெருக்கமாக வேலை செய்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”

- Advertisement -

நீங்கள் இந்த விளையாட்டின் நட்சத்திரம். ஆனால் நீங்கள் உங்களுடைய பாராட்டுக்கள், சாதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் வாசலில் விட்டு விட்டு பயிற்சியாளராக நடந்து வந்து உங்களிடம் நாங்கள் நினைக்கும் அனைத்தையும் சொல்ல வசதியாக உணரும் அளவுக்கு வந்தீர்கள். அதுவே உங்கள் பரிசு, உங்கள் பணிவு மற்றும் இந்த விளையாட்டின் மீதான உங்கள் அன்பு. நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்”

இதையும் படிங்க: உலக கிரிக்கெட்டை ஜோடியாக கலக்கிய இந்தியர்கள்.. ஸ்பெஷல் ஐசிசி விருதை வென்ற பும்ரா, மந்தனா

“ஒவ்வொரு நினைவும் பாராட்டப்படும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் தான் என்னுடைய மனைவி என்று என் மனைவி குறிப்பிடுவார். அப்படி அழைப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். உங்கள் களஞ்சியத்தில் இருந்து விடுபட்ட ஒரே விஷயமான உலகக் கோப்பையை நாம் ஒன்றாக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ராகுல் பாய் உங்களை நம்பிக்கைகுரியவர், பயிற்சியாளர், எனது நண்பர் என்றழைப்பது முழுமையான பாக்கியம்” என கூறியுள்ளார்.

- Advertisement -