உலக கிரிக்கெட்டை ஜோடியாக கலக்கிய இந்தியர்கள்.. ஸ்பெஷல் ஐசிசி விருதை வென்ற பும்ரா, மந்தனா

Bumrah and Mandhana
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா கடந்த ஜூன் மாதம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திர படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் மிரட்டிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.

அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டியா, விராட் கோலி உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். ஆனால் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்தும் போது 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ஐசிசி விருது:
அதே போல மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது 16, 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்படி தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடி 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருதையும் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் 2024 ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர் என்ற ஐசிசி விருதை ஜஸ்ப்ரித் பும்ரா வென்றுள்ளார். அந்த விருதுக்கு இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரகமனுல்லா குர்பாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இறுதியில் அந்த இருவரையும் முந்திய பும்ரா 2024 ஜூன் மாதத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்று ஐசிசி’யின் கௌரவமான விருதை வென்றுள்ளார்.

- Advertisement -

அதே போல மகளிர் கிரிக்கெட்டில் 2024 ஜூன் மாதம் சிறந்து விளங்கிய வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் மையா பவுச்சர், இலங்கையின் விஸ்மி குணரத்னே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் அந்த இருவரையும் முந்திய மந்தனா 2024 ஜூன் மாதத்தின் சிறந்த சர்வதேச வீராங்கனை என்ற ஐசிசி விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுடன் பாகிஸ்தானால் நெருங்க முடியாது.. நம்மகிட்ட இது இல்ல.. அவங்க எங்கயோ போய்ட்டாங்க.. ரசித் லதீப்

குறிப்பாக கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த சதங்கள் அடித்த அவர் மொத்தம் 339 ரன்கள் அடித்து 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல உதவினர். அதே போல சென்னையில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்த அவர் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் உதவியால் இந்த விருதை வென்றுள்ளார்.

Advertisement