- Advertisement -
ஐ.பி.எல்

இந்த ஆட்டநாயகன் விருதுக்கு குஜராத் தான் மெய்ன் காரணம்.. இதெல்லாம் பத்தாது.. ரோஹித் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 30ஆம் தேதி முள்ளான்பூரில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ள தகுதி பெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 228/5 ரன்களை எடுத்து அசத்தியது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 81, ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்களை எடுத்து அசத்தினார்கள். குஜராத்துக்கு அதிகபட்சமாக சாய் கிஷோர் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய குஜராத் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 208/6 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் ரோஹித்:

அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 80, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் கை கொடுக்கவில்லை. மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த தோல்வியால் குஜராத் தொடரிலிருந்து வெளியேறியது. மும்பையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஆரம்பத்திலேயே தாம் கொடுத்த 2 கேட்ச்களை குஜராத் தவற விட்டதே பெரிய ரன்கள் குவிக்க காரணம் என்று ரோஹித் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை நான் 4 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளேன். அது போதாது. இன்னும் நிறைய அரை சதங்கள் அடித்திருப்பதை விரும்புகிறேன். இன்று எங்களுடைய அணிக்கு நல்ல நாள். எலிமினேட்டர் போட்டியின் முக்கியத்துவத்தை புரிந்துள்ள நான் எங்களுடைய அணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது முக்கியம். எங்களுடைய அணியின் ஒட்டுமொத்த முயற்சியைப் பார்த்து பெருமையடைகிறேன்”

- Advertisement -

அதிர்ஷ்டத்தின் உதவி:

“களத்தில் விளையாடும் போது மற்ற அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு என்னுடைய அணிக்காக எப்படி வேலை செய்யலாம் என்று பார்க்கிறேன். இன்று எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியிருந்தது. இன்று அதை செய்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. பனி வந்ததால் பேட்டிங் செய்வது கொஞ்சம் சவாலாக இருந்தது”

இதையும் படிங்க: 436 ரன்ஸ்.. சாதனை படைத்த எலிமினேட்டரில்.. குஜராத்தை வீட்டுக்கு அனுப்பிய மும்பை.. சாதனை வெற்றி

“எங்கள் பவுலர்கள் தங்களது உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து அசத்தினர். ஏற்கனவே அது போன்ற ஷாட்டுகளை நான் அடித்த போது ஃபீல்டர் கையில் விழுந்தது. அதையும் தாண்டி அசத்துவதற்காக தேவைப்பட்ட அதிர்ஷ்டம் இன்று எனக்கு கிடைத்தது. கேட்ச்கள் தவற விடப்பட்டதால் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. ஆனால் அதன் பின்பும் நீங்கள் சிறப்பாக விளையாடி வேகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எங்கள் பவுலிங் சிறப்பாக இருந்தது. மிகவும் அனுபவமிக்க பேர்ஸ்டோ இன்று தனது முதல் போட்டியில் விளையாடுவது போல் தெரியவில்லை. எங்களுக்கு கிடைத்த துவக்கத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்” என்று கூறினார்.

- Advertisement -