436 ரன்ஸ்.. சாதனை படைத்த எலிமினேட்டரில்.. குஜராத்தை வீட்டுக்கு அனுப்பிய மும்பை.. சாதனை வெற்றி

Ipl eliminator
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் முக்கியமான எலிமினேட்டர் போட்டி மே 30ஆம் தேதி நடைபெற்றது. முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் இடங்களைப் பிடித்த குஜராத், மும்பை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 228/5 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு துவக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 81 (50) ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்கள் விளாசி கை கொடுத்தார்கள்.

- Advertisement -

மும்பை வெற்றி:

குஜராத்துக்கு அதிகபட்சமாக சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் சாய் சுதர்சன் வழக்கம் போல நங்கூரம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வந்த குசால் மெண்டிஸ் 20 (10) ரன்னில் ஹிட் விக்கெட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் அடுத்து வந்த மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை அடித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் அப்போது சுந்தரை 48 (24) ரன்னில் காலி செய்த பும்ரா அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து திருப்புமுனையை உண்டாக்கினார்.

- Advertisement -

சாதனை போட்டி:

அதைப் பயன்படுத்திய மும்பை மறுபுறம் போராடிய சாய் சுதர்சனை 80 (49) ரன்னில் காலி செய்தது. மிடில் ஆர்டரில் ரூதர்போர்ட் 24, ஷாருக்கான் 13 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் ராகுல் திவாடியா 16* (11) ரன்களை விளாசி ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் 20 ஓவரில் குஜராத்தை 208/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 பஞ்சாப்பை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

அத்துடன் 4 தொடர் தோல்விகளுக்கு பின் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக எலிமினேட்டர் போட்டியில் வென்று மும்பை சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். மறுபுறம் லீக் சுற்றில் அசத்திய குஜராத் முக்கிய நேரத்தில் சொதப்பி இத்தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

இதையும் படிங்க: 51/2 டூ 302/3.. என்னையா கழற்றி விட்டீங்க.. கருண் நாயர் க்ளாஸ் கம்பேக்.. சர்பராஸ் பதிலடி.. இந்தியா ஏ அசத்தல்

மேலும் இப்போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 436 ரன்கள் அடித்தன. இதன் வாயிலாக வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியாக இப்போட்டி சாதனை படைத்தது. இதற்கு முன் 2014 சீசனில் மும்பையில் நடைபெற்ற பஞ்சாப் – சென்னை அணிகள் மோதிய குவாலிபயர் 2 போட்டியில் 428 ரன்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனை.

Advertisement