- Advertisement -
இந்திய கிரிக்கெட்

24க்கு 23 வெற்றி.. 2023 ஜஸ்ட் மிஸ்.. 2 ஐசிசி கோப்பைக்கான திட்டத்தை 2022 ஆஸியில் உருவாக்குனேன்.. ரோஹித் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. அதற்கு முன்பாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 மாதத்துக்குள் 2 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்தது. ஆச்சரியப்படும் வகையில் அந்த 2 தொடர்களிலும் இந்தியா ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் கோப்பையை முத்தமிட்டது.

அதற்கு முன்பாக 2023 உலகக் கோப்பையிலும் 10 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஃபைனலில் மட்டும் தோற்றது. அந்த வகையில் கடந்த 3 ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் விளையாடிய இந்தியா 23 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேலும் தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை ஒன்றை இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தோல்வி:

இந்நிலையில் இந்த அடுத்தடுத்த கோப்பைகளை வெல்வதற்கான திட்டத்தை ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதில் இங்கிலாந்திடம் தோற்ற போது எடுத்ததாக ரோகித் சர்மா கூறியுள்ளார். அதாவது பயமின்றி எதிரணிகளை அடிக்க வேண்டும் என்ற முடிவை அப்போது எடுத்தது தற்போது பலனைக் கொடுத்துள்ளதாக ரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் 2023 உலகக் கோப்பையையும் வென்றிருந்தால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொலைக்காட்சியில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பையில் நாங்கள் துவங்கினோம். நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்லாவிட்டாலும் அரையிறுதிக்கு சென்று தோற்றோம். அந்த தோல்விக்குப்பின் உங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம், இப்படித்தான் விளையாட விரும்புகிறோம் என்பது போன்ற நிறைய விஷயங்களை எங்கள் வீரர்களிடம் நாங்கள் தெளிவாக்கினோம்”

- Advertisement -

23க்கு 22 வெற்றி:

“களத்திற்கு சென்று சுதந்திரமாக பயமின்றி விளையாடுவதற்காக வீரர்களிடம் நிறைய தெளிவான பேச்சு வார்த்தை நடத்தினோம். அதைப் பின்பற்றி சில தோல்விகளைச் சந்தித்த நாங்கள் கீழே சென்றாலும் அதற்காக பதற்றமடையவில்லை. எங்களது செயல்முறைகளைப் பின்பற்றுவதிலிருந்து நகரவில்லை. ஒருவேளை 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் வென்றதாக கற்பனை செய்யுங்கள்”

“அப்போது 3 ஐசிசி கோப்பைகளை தோல்வியே சந்திக்காமல் வென்று சாதனை படைத்திருப்போம். அதை அதற்கு முன் யாருமே கேட்டிருக்க மாட்டார்கள். 24 போட்டிகளில் 23 வெற்றிகளைப் பெற்றோம். அது வெளியில் பார்ப்பதற்கு நன்றாக தெரியும். ஆனால் நாங்கள் அதற்காக நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தோம். இறுதியில் வெற்றிக் கிடைத்த போது நீங்கள் கொண்டாட வேண்டும். அதற்கு தகுதியானவர்கள்”

இதையும் படிங்க: எல்லாரும் 60,70 ரன்கள் அடிக்குறாங்க.. நீங்க என்ன இப்படி? சி.எஸ்.கே அணி நிகழ்த்திய மோசமான சாதனை – விவரம் இதோ

“அந்தத் தொடர்களில் விளையாடிய எங்கள் வீரர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள். 2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரில் தோற்றோம். பின்னர் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இந்த 9 மாதங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்” எனக் கூறினார்

- Advertisement -