எல்லாரும் 60,70 ரன்கள் அடிக்குறாங்க.. நீங்க என்ன இப்படி? சி.எஸ்.கே அணி நிகழ்த்திய மோசமான சாதனை – விவரம் இதோ

CSK
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய எட்டாவது லீக் ஆட்டமானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.

சி.எஸ்.கே அணி நிகழ்த்திய மோசமான சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 51 ரன்களையும், பில் சால்ட் 32 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே அடித்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய சென்னை அணி இந்த 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அனைத்து அணிகளுமே பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 60-70 ரன்கள் குவித்து வரும் வேளையில் நேற்றைய போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது மட்டுமின்றி முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 30 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதையும் படிங்க : யார்கிட்டயும் தைரியம் இல்லை.. தோனி வந்து ஏன்னு சொல்லணும்.. சிஎஸ்கே ரசிகர்கள் மூடர்களா? திவாரி விமர்சனம்

இதன் மூலம் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பவர்பிளே ஓவர்களில் குறைந்த ரன்களை அடித்த அணியாக சென்னை அணி மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement