- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 மாசம்.. கேரியர் முடிஞ்ச்சுன்னு நினைக்காதீங்க.. 5வது டெஸ்டில் விலகியது ஏன்? ரோஹித் விளக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா அடுத்த 3 போட்டிகளில் ரோகித் தலைமையில் 2 தோல்விகளை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அவருடைய தலைமையில் இந்தியா வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ஐந்தாவது போட்டியில் ரோகித் சர்மா அணியின் நலனுக்காக தம்மைத்தாமே நீக்கிக்கொண்டார். அதனால் அவருடைய டெஸ்ட் கேரியர் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஓய்வு இல்லை:

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாம் ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “நான் தற்காலிகமாக விலகியுள்ளேன். அவ்வளவு தான் சொல்ல முடியும். நான் ரன்கள் அடிக்காததால் நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் கடைசி போட்டிக்கு தேவை என்று தேர்வாளர்களிடம் சொன்னேன்”

“சுமாரான ஃபார்மில் இருக்கும் வீரர்களை நீண்ட காலம் நீங்கள் சுமக்க இருக்க முடியாது என்பதை எளிமையான காரணம். இருப்பினும் நீண்ட காலம் விளையாடுவதால் நீங்கள் யோசித்து முடிவெடுங்கள் என்று அவர்களிடம் சொன்னார்கள். அது கடினமான முடிவு என்றாலும் சிட்னிக்கு வந்த பின் நான் அதை எடுத்தேன். புத்தாண்டு தினத்தன்று இதை நான் தேர்வாளர்களிடம் சொல்லவில்லை”

- Advertisement -

மீண்டும் வருவேன்:

“பேட்டிங்கில் நிறைய முயற்சித்தும் எனக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை. எனவே அணிக்காக விலகி இருப்பது முக்கியம். அதற்காக ஓய்வெடுக்கும் முடிவையோ கேப்டன்சிப் பதவியை ராஜினாமா செய்த முடிவையோ எடுக்கவில்லை. நான் ரன்கள் அடிக்காத காரணத்தால் மட்டுமே எடுத்தேன். அடுத்த 2 அல்லது 5 மாதங்களில் நான் மீண்டும் ரன்கள் அடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு எந்த கேரண்டியும் இல்லை”

இதையும் படிங்க: 5, 6வது சேனல் பலமே பலவீனமாகிடுச்சு.. இதை செஞ்சா நீங்க கூட இப்போ கோலியை அவுட்டாக்கலாம்.. மஞ்ரேக்கர் ஆதங்கம்

“இது போன்ற விஷயங்களை நான் பலமுறை பார்த்துள்ளேன். அதே சமயம் நீங்கள் நிதர்சனமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அவரிடம் நன்றி என்று தொகுப்பாளர் சொன்னார். அதற்கு நான் எங்கேயும் செல்லவில்லை என்று ரோகித் சர்மா சொன்னது தொகுப்பாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. மொத்தத்தில் அடுத்த 5 மாதத்தில் நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மீண்டும் தாம் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக ரோகித் சர்மா மறைமுகமாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -