5, 6வது சேனல் பலமே பலவீனமாகிடுச்சு.. இதை செஞ்சா நீங்க கூட இப்போ கோலியை அவுட்டாக்கலாம்.. மஞ்ரேக்கர் ஆதங்கம்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடி வருகிறார். சமீபத்திய வருடங்களாகவே அவுட் சைட் ஆஃப் பந்துகளில் அவர் எதிரணிக்கு தம்முடைய விக்கெட்டை பரிசாக கொடுத்து வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் இந்த தொடரில் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் இந்தியாவில் வெற்றிக்கு பங்காற்றினார்.

ஆனால் அடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஸ்டம்ப் பந்துகளில் மீண்டும் அவர் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்து தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதன் காரணமாக சச்சின் போல கவர் ட்ரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று சில முன்னாள் வீரர்கள் விராட் கோலிக்கு ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் அவற்றையெல்லாம் கேட்காத விராட் கோலி தற்போது நடைபெறும் ஐந்தாவது போட்டியில் மீண்டும் அப்படியே அவுட்டானார்.

- Advertisement -

கோலியின் பரிதாபம்:

அதனால் ரோஹித் சர்மா போல அவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் 2015 காலகட்டங்களில் பலமாக இருந்த விராட் கோலியின் கவர் டிரைவ் தற்போது பலவீனமாக மாறியுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தப் பையனுக்காக நீங்கள் வருந்த வேண்டும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த போது கவர் டிரைவ் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் தற்போது அதுவே அவருடைய மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது. தற்போதைய விக்கெட்டில் இதற்கு முன் பார்க்காத ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். அவுட் சைட் ஆஃப் ஒரு பிரச்சனை. 2014 இங்கிலாந்து தொடரில் ஆண்டர்சனுக்கு எதிராக அவர் அந்த பந்துகளில் தடுமாறினார்”

- Advertisement -

ஈஸி விக்கெட்:

“ஆனால் இப்போது அவுட் சைட் ஆஃப் பந்துகள் ஃபுல்லாக வந்தால் அவர் கவர் ட்ரைவ் அடித்து அவுட்டாகிறார். அதை புரிந்து கொண்டு இப்போது அனைத்து பவுலர்களும் லென்த்தை பார்க்காமல் 5, 6வது ஸ்டம்ப் லைனில் வீசி அவரை காலி செய்கிறார்கள். அந்த வகையில் இப்போது அந்த சேனலில் பந்தை எங்கே வைத்தாலும் விராட் கோலி அவுட்டாகிறார்”

இதையும் படிங்க: தம்பி யார்கிட்ட மோதுறீங்க.. பும்ராவிடம் வம்பிழுத்த சாம் கோன்ஸ்டஸ் தான் அதுக்கு கரணம்.. டாம் மூடி விமர்சனம்

“அதனால் இப்போதெல்லாம் வெறும் சாதாரண பவுலர் யாராக இருந்தாலும் அவுட் சைட் சேனலில் பந்து வீசி அவருடைய விக்கெட்டை எடுக்கிறார்கள். அதற்காக நீங்கள் வருந்த வேண்டும். ஏனெனில் அது விராட் கோலி ரன்கள் அடிக்கக்கூடிய இடமாகும்” என்று கூறினார். மொத்தத்தில் இப்படியே விளையாடினால் விராட் கோலியும் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement