ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 9-1 ரன்கள் எடுத்துள்ளது. அப்போட்டியில் மாலை நேரத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா வேண்டுமென்று நேரத்தை தாமதப்படுத்தும் வகையில் செயல்பட்டார். அதனால் அதிருப்தியடைந்த இந்திய அணியின் கேப்டன் பும்ரா என்னவாயிற்று என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார்.
யார்கிட்ட மோதுறீங்க:
அதற்கு கவாஜா அமைதியாக இருந்த நிலையில் எதிர்ப்புறம் தேவையின்றி 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் சில வார்த்தைகளை பேசினார். அவருக்கு பும்ரா பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார்கள். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் கவாஜாவை காலி செய்த பும்ரா எதிர்ப்புறம் நின்ற கோன்ஸ்டஸ்க்கு வெறித்தனமாக முறைத்து பதிலடி கொடுத்தார்.
அப்படியே இந்திய அணியினரும் மொத்தமாக அவரிடம் சென்று தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்நிலையில் பும்ரா போன்ற தரமான பவுலரிடம் வெறும் 19 வயதில் இப்படி தேவையின்றி சீண்டல்களை வைத்துக் கொள்ளக் கூடாது என சாம் கோன்ஸ்டஸை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி சாடியுள்ளார். மேலும் 19 வயதிலேயே இந்த தேவையற்ற செயல்களை செய்யக்கூடாது என அவருக்கு ஆஸ்திரேலிய அணியினர் ஆலோசனை கொடுக்க வேண்டும் என்றும் மூடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மூடி அட்வைஸ்:
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சாம் கோன்ஸ்டஸ் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய தன்னம்பிக்கை மற்றும் இளமை ஆர்வம் குறையாமல் ஆஸ்திரேலிய அணியினர் அவருக்கு வழிகாட்டுதல்களை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். உஸ்மான் கவாஜா முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருந்தார்”
இதையும் படிங்க: என்னங்க உருட்டு இது.. இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளித்த அம்பயர் மீது பும்ரா அதிருப்தி.. உத்தப்பா, வாகன்
“எனவே தன்னுடைய கவனத்தை சீர்குலைக்காமல் எதிர்ப்புறம் தன்னுடைய பார்ட்னரை அவர் செட்டில் செய்ய வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் கவாஜா விக்கெட் பறிபோக கோன்ஸ்டஸ் தான் காரணம் என்றும் மூடி விமர்சித்துள்ளார். முன்னதாக முதல் போட்டியில் அறிமுகமான கோன்ஸ்டஸ் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பும்ராவை அடிப்பேன் என்று சவால் விட்டுள்ளார். அதனாலேயே இப்போட்டியில் பும்ராவை சீண்டிய அவருக்கு இந்திய அணியினர் மொத்தமாக சென்று பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



