- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துபாய் இந்தியாவின் சொந்த ஊர் இல்ல.. செமி ஃபைனலில் எங்களுக்கே அது கேள்விக்குறி தான்.. ரோஹித் பதிலடி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா செமி ஃபைனலில் குரூப் பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவை மார்ச் 4ஆம் தேதி எதிர்கொள்கிறது.

முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி பாதுகாப்பு பிரச்சனைகளால் தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. ஆனால் அங்கே ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே மைதானத்தில் விளையாடுவதால் பிட்ச் எப்படி இருக்கும் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக துபாயில் இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாத சாதகத்தை பெற்றிருப்பதாக மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு சாதகமா:

இந்நிலையில் துபாய் ஒன்றும் இந்தியாவின் சொந்த ஊர் கிடையாது என்று கேப்டன் ரோஹித் சர்மா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் செமி ஃபைனலில் பிட்ச் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ரோஹித் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. நாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் மேற்பரப்பு ஒரே மாதிரியாக இருந்தது”

“ஆனால் 3 போட்டிகளிலுமே பிட்ச் வெவ்வேறு மாதிரியாக நடந்து கொண்டது. செமி ஃபைனலில் அது எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்கே தெரியாது. ஆனால் எது நடந்தாலும் நாங்கள் என்ன நடக்கிறது என்பதற்குத் தகுந்தார் போல் எங்களை உட்படுத்திக் கொண்டு விளையாட வேண்டும். துபாய் எங்களுடைய வீடு கிடையாது. நாங்கள் இங்கே அதிகப் போட்டிகளிலும் விளையாடியதில்லை”

- Advertisement -

ரோஹித் பதிலடி:

“எங்களுக்கும் இது புதிய மைதானமே. நியூசிலாந்துக்கு எதிராக பந்து ஸ்விங், வேகத்துக்கும் கொஞ்சம் சாதகமாக இருந்தது. அதை முதல் 2 போட்டிகளில் பார்க்க முடியவில்லை. இங்கே 3 போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஆனால் இங்கே 4 – 5 பிட்ச்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொன்றும் வித்தியாசமான இயற்கையைக் கொண்டிருக்கும். அது எப்படி விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியாது”

இதையும் படிங்க: ரோஹித் சொல்வது உண்மையில்லை.. தனது நெட் பிராக்டீஸ் குறித்து ரகசியத்தை வெளியிட்ட – வருண் சக்ரவர்த்தி

“பிட்ச்கள் பார்க்க ஒன்றாக தெரிந்தாலும் விளையாடும் போது வித்தியாசமாக இருக்கும். எனவே நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியதைப் போலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடலாம் என்று செல்ல முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்து கொஞ்சம் அதிகமாக சுழன்றது. அதை முதல் 2 போட்டிகளில் அதிகம் பார்க்க முடியவில்லை. எனவே அடுத்தப் போட்டியில் அது எப்படி இருக்கும் என்பது எங்களுக்கும் கேள்வி குறியாகும்” எனக் கூறினார்.

- Advertisement -