ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் வேளையில் முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற தங்களது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று துபாய் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ரோஹித் சர்மா சொல்ற மாத்தி எதுவும் இல்ல : வருண் சக்ரவர்த்தி
இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத அவர் நேற்றைய போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமாக காரணமாக திகழ்ந்தார்.
அதுமட்டுமின்றி தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக எதிர்வரும் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று அனைவரும் பேசி வருகின்றனர். இந்தப் போட்டி முடிந்த பின்னர் வருண் சக்கரவர்த்தியை பாராட்டி பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசிய போது :
வலைப்பயிற்சியின் போது வருண் சக்கரவர்த்தி எங்களிடமே அவருடைய அதிக வெறியேஷன்களை காண்பிப்பது கிடையாது. அந்த அளவிற்கு அவர் முன்னெச்சரிக்கையோடு செயல்படுகிறார் என பாராட்டியிருக்கிறார். இந்நிலையில் தான் அப்படி எந்த ஒரு செயலையும் தான் செய்யவில்லை என்றும் வலைப்பயிற்யின் போது ஏன் வேரியேஷன்களை கொண்டு வருவதில்லை என்பது குறித்தும் சில கருத்துக்களை வருண் சக்ரவர்த்தி பகிர்ந்து உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு 6 பந்துகளை ஆறு விதமாக வீசுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டுவேன். எனவே அதனால் வெவ்வேறு வெறியேஷன்களை பயன்படுத்தி பந்துவீசி பயிற்சி செய்வேன். ஆனால் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை அப்படி கிடையாது.
இதையும் படிங்க :
10 ஓவர்கள் வீசவேண்டும் என்பதனால் அதிக வேரியேஷங்களை வலைப்பயிற்சியின் போது பயன்படுத்தாமல் எனக்கு வரும் இயல்பான பந்தையே வலைப்பயிற்சியில் வீசுவேன். மற்றபடி தேவை இருந்தால் ஒருநாள் போட்டிகளுக்கும் வெறியேஷன்கள் தேவை என்றால் வலைப்பயிற்சியின் போது கொண்டு வருவேன் என வருண் சக்ரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.



