- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்களுக்கு சிராஜ் அசர மாட்டாரு.. இந்தியா – ஆஸின்னா சும்மாவா? ஹெட் மோதல் பற்றி ரோஹித்

அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் சதத்தை அடித்த ட்ராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபமாக வழி அனுப்பினார்.

அதற்கு ஹெட்டும் சில வார்த்தைகள் சொல்லிக்கொண்டே வெளியேறிய நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிராஜுக்கு எதிராக கூச்சலிட்டார்கள். இறுதியில் “நன்றாக பந்து வீசினீர்கள்” என்று சொன்னதற்காக சிராஜ் அப்படி நடந்து கொண்டது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஹெட் கூறினார். ஆனால் டிராவிஸ் ஹெட் பொய் சொன்னார் என்று தெரிவித்த சிராஜ் அவர் சில மோசமான வார்த்தைகளை கூறியதாலேயே அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

- Advertisement -

ரோஹித் ஆதரவு:

இந்நிலையில் அடிலெய்ட் ரசிகர்கள் கூச்சலிட்டதற்காக சிராஜ் அசர மாட்டார் என்று கேப்டன் ரோகித் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த தருணத்தின் போது நான் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஹெட் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது”

“அந்த நேரத்தில் அவருடைய விக்கெட்டை எடுத்த சிராஜ் அப்படி கொண்டாடினார். அதனால் இருவரும் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்கள். அது எனக்கு தெரியாது. அதே சமயம் அந்த ஒரு தருணத்தை மட்டும் பார்க்காமல் மொத்த போட்டியையும் பார்ப்பதே என்னுடைய வேலை. இந்தியா – ஆஸ்திரேலியா போன்ற தரமான 2 அணிகள் விளையாடும் போது இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்”

- Advertisement -

ரசிகர்கள் எதிர்ப்பு:

“போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை நாங்கள் கோட்டை தாண்டி கொண்டு வர விரும்பவில்லை. அதே சமயம் இவ்வாறு எதிரணியுடன் சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது மோசமான விஷயமல்ல. சிராஜ் மட்டுமின்றி கடந்த காலங்களில் இது போல் நிறைய கிரிகெட்டர்கள் இப்படி ஈடுபட்டுள்ளார்கள். அங்கே ஆக்ரோஷத்திற்கும் அதிக ஆக்ரோஷத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: கடந்த முறை அங்கு நல்லா விளையாடியிருக்கோம்.. அதனால் இந்த முறையும் அங்க ஜெயிப்போம் – ரோஹித் நம்பிக்கை

“கேப்டனாக நாங்கள் கோட்டை தாண்டாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்வது என்னுடைய வேலை. ஆனால் இது போன்ற சில வார்த்தைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. எங்கள் வீரர்கள் இது போன்ற பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு முன் விளையாடியுள்ளார்கள். எனவே இது போன்ற விஷயங்கள் தங்களுடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -