கடந்த முறை அங்கு நல்லா விளையாடியிருக்கோம்.. அதனால் இந்த முறையும் அங்க ஜெயிப்போம் – ரோஹித் நம்பிக்கை

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே பலமான முன்னிலையை பிடித்தது.

அங்கு எங்களால் வெற்றிபெற முடியும் :

அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் துவங்கி இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று எந்த அணி தொடரை கைப்பற்றப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டி முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியா அணியின் கோட்டையான காபா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 16-ஆம் தேதி துவங்க உள்ள இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் தயாராகும். அதேபோன்று கடந்த முறை முதல் முறையாக காபா மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி மீண்டும் அங்கு வெற்றி கொடியை நாட்ட முயற்சிக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த முறை நாங்கள் காபா மைதானத்தில் விளையாடிய போது எங்களுக்கு மிகச் சிறப்பான வெற்றி கிடைத்தது. எப்போதுமே நினைவில் இருக்கும் அளவிற்கு அந்த வெற்றி மிகச்சிறப்பான ஒரு தருணம். எனவே கடந்த முறை போன்று இந்த முறையும் நிச்சயம் நாங்கள் அங்கு வெற்றிபெற முயற்சிப்போம்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே எங்களுக்கு ஒரு சவால் தான். இருந்தாலும் இம்முறையும் புதிதாக காபா மைதானத்தில் விளையாடுவது போன்று கருதி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement