- Advertisement -
உலகக் கோப்பை 2023

அந்த தோல்வியால் கிரிக்கெட்டையே விட்டு போய்டலாம்ன்னு நினச்சேன்.. கம்பேக் கொடுத்தது பற்றி ரோஹித் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. ஆனால் அதன் பின் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு சென்றதும் தோல்வியடைந்து வெறுங்கையுடன் வெளியேறியது. அந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பே 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்த அவர் இந்தியாவுக்காகவும் ஐசிசி கோப்பையை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 2022 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலும் செமி ஃபைனலில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அப்போது சொந்த சாதனைகளைப் கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை அவர் கையிலெடுத்தார்.

- Advertisement -

2023 வேதனைத் தோல்வி:

அந்த அணுகுமுறையில் 2023 உலகக் கோப்பையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு சென்றது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோன்றது.

இத்தனைக்கும் அப்போட்டியில் பவர்பிளேவில் பட்டாசாக விளையாடிய ரோஹித் சர்மா நல்ல துவக்கத்தைக் கொடுத்த போதிலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்தியா தோற்றது. அந்த தோல்வியால் மனமுடைந்த ரோஹித் சர்மா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் அதற்காக அசராத அவர் அதே அணுகுமுறையில் விளையாடி 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவுக்காக வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

போக நினைத்த ரோஹித்:

இந்நிலையில் 2023 உலகக் கோப்பை தோல்வியால் கிரிக்கெட்டை விட்டே போகலாமென்று நினைத்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி கம்பேக் கொடுத்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2023 ஃபைனலில் தோற்றது விழுங்குவதற்கு மிகவும் கடினமான மாத்திரையாக இருந்தது. ஆனால் வாழ்க்கை அதோடு முடிந்து விடாது என்பது எனக்குத் தெரியும்”

“அது எனக்கு எப்படி வேதனையை விட்டுவிட்டு புதிதாக துவங்க வேண்டும் என்பதற்கான பாடமாக அமைந்தது. ஏனெனில் அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது என்பது எனக்குத் தெரியும். என்னுடைய மொத்த கவனத்தையும் அங்கே போட வேண்டியிருந்தது. அதை இப்போது சொல்வது எளிதாக இருந்தாலும் அச்சமயத்தில் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இனிமேலும் இந்த விளையாட்டில் விளையாடக்கூடாது என்று நான் நினைத்தேன்”

இதையும் படிங்க: மந்தனா 2வது வீராங்கனையாக உலக சாதனை.. 14.4 ஓவரிலேயே இலங்கையை சாய்த்த இந்திய மகளிரணி

“ஏனெனில் அது என்னுடைய உடலில் இருந்த அனைத்தையும் வெளியே எடுத்ததால் எனக்குள் எதுவுமில்லை. அதிலிருந்து வெளியே வர எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. இதற்காக நான் கனவு கண்டேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதனால் வலுவாக மீண்டும் திரும்புவதற்காக களமிறங்க கொஞ்சம் நேரமும் எனர்ஜியும் தேவைப்பட்டது” என்று கூறினார்.

- Advertisement -