ரகானே, புஜாரா கேரியர் முடிந்தது? விராட் கோலியின் இடத்தில் ரஜத் படிடார் ஏன்.. ரோஹித் விளக்கம்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிக்குமா அல்லது தங்களின் சொந்த ஊரில் இங்கிலாந்தை தெறிக்க வெட்டு இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்ப ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிலிருந்து விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர் ரஜத் படிடார் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் கேரியர் முடிந்ததாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கேரியர் முடிந்ததா:
ஏனெனில் ஒரு கட்டத்தில் முதன்மை வீரர்களாக இருந்த அவர்கள் சமீபத்திய வருடங்களில் சுமாராக செயல்பட்டதால் 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டனர். இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி கம்பேக் கொடுத்த அவர்களில் புஜாரா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ரகானே வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் மீண்டும் கழற்றி விடப்பட்டனர்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக் கோப்பையில் ரகானே தடுமாறும் நிலையில் புஜாரா இரட்டை சதமடித்து நல்ல ஃபார்மில் இருப்பதால் விராட் கோலிக்கு பதில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ள பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில் ரகானே மற்றும் புஜாரா ஆகியோரின் கேரியர் முடியவில்லை என்று தெரிவிக்கும் கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சீனியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது பற்றி நாங்கள் சிந்தித்தோம். அதே போல இந்த இளம் வீரர்களுக்கு எப்போது நாங்கள் வாய்ப்பு கொடுப்போம்? என்பதைப் பற்றியும் நான் சிந்தித்தேன். அதே சமயம் இவ்வளவு ரன்கள் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஏராளமான அனுபவத்தைக் கொண்டுள்ள மூத்த வீரர்களை கழற்றி விடுவது மிகவும் கடினமாகும்”

இதையும் படிங்க: ஆண்டர்சன் இல்லாமல் இந்தியாவை சாய்க்க முக்கிய திட்டம்.. முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை.. வெளியிட்ட இங்கிலாந்து

“இருப்பினும் சில நேரங்களில் இதற்கு முன் விளையாடாத வெளிநாடுகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் தடுமாறுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. எனவே இந்த இளம் வீரர்களுக்கு இது போன்ற நேரங்களில் வாய்ப்பு கொடுக்கிறோம். அதே நேரம் ஃபிட்டாக தொடர்ந்து ரன்கள் அடித்துக் கொண்டிருக்கும் வரை யாருக்கும் இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவுகள் மூடப்படாது. அது போன்ற வீரர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அணிக்குள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

Advertisement