ஆண்டர்சன் இல்லாமல் இந்தியாவை சாய்க்க முக்கிய திட்டம்.. முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை.. வெளியிட்ட இங்கிலாந்து

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. அதில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை வெற்றிகரமாக துவக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

குறிப்பாக கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை இம்முறை அதிரடியாக விளையாடி வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணியினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத் நகரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான தங்களுடைய விளையாடும் 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து ஒரு நாள் முன்பாகவே ஜனவரி 24ஆம் தேதி தைரியமாக வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணி:
அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்படவில்லை. இந்திய மண்ணில் 6வது முறையாக விளையாடும் அவர் ஏற்கனவே 13 போட்டிகளில் 34 விக்கெட்டுகள் எடுத்த அனுபவத்தை கொண்டிருந்தும் தேர்வு செய்யப்படவில்லை. அதை விட ஹைதராபாத் மைதானம் கடைசி 2 நாட்களில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே அதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை சாய்ப்பதற்காக இங்கிலாந்து அணி 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக அனுபவம் மிகுந்த ஜேக் லீச் முதன்மை ஸ்பின்னராக தேர்வாகியுள்ள நிலையில் டாம் ஹார்ட்லி ஹைதராபாத் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். அவரைத் தொடர்ந்து 3வது ஸ்பின்னராக மற்றொரு இளம் வீரர் ரெஹன் அஹ்மத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதனால் மார்க் வுட் மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தால் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்வு செய்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மற்றபடி ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.

இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டின் முக்கிய ஐசிசி விருதை வென்ற சூரியகுமார்.. யாருமே படைக்காத புதிய உலக சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து லெவன்: ஜாக் கிராவ்லி, பென் டுக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரெஹன் அஹ்மது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேக் லீச்

Advertisement