IND vs ENG : கேப்டன்ஷிப் ஓகே ஆனால் அன்றும் இன்றும் முக்கிய போட்டியில் மாறாமல் தொடரும் ரோஹித் சர்மாவின் சொதப்பல்கள்

Rohith
- Advertisement -

இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதி வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பதிவு செய்ததால் 1 – 1* என்ற கணக்கில் சமநிலை அடைந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17இல் நடைபெற்றது. மான்செஸ்டரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் என முக்கிய பேட்ஸ்மேன்கள் முகமது சிராஜ் வீசிய ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டான அந்த அணிக்கு ஜேசன் ராய் 41 (31) ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 27 (29) ரன்களிலும் பாண்டியாவிடம் அவுட்டானார்கள்.

Hardik Pandya

- Advertisement -

அதனால் 74/4 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மொயின் அலி 34 (44) ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் 60 (80) ரன்களிலும் போராடி அவுட்டானார்கள். லியம் லிவிங்ஸ்டன் 27, ஓவர்ட்டன் 32 என அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்களும் பெரிய ரன்களை எடுக்க தவறினார்கள். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

போராடி வெற்றி:
அதை தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1 (3) ரோகித் சர்மா 17 (17) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 (22) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். அப்போது சூரியகுமார் யாதவும் 16 (28) ரன்களில் அவுட்டானதால் 72/4 என தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பொறுப்பாகவும் நிதானமாகவும் அதிரடியாகவும் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்கள்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

அதில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்கள் எடுத்து பாண்டியா ஆட்டமிழக்க மறுபுறம் அபாரமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (113) ரன்கள் குவித்து இந்தியாவை 261/5 ரன்கள் எடுக்க வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா வலுவான இங்கிலாந்தை மீண்டும் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

ஏமாற்றிய ரோஹித்:
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்த நிலையில் ஒருநாள் தொடரிலும் கோப்பையை வென்று மிரட்டியுள்ளது. இதுபோக முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த தோல்வியே அடையாமல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் தற்போது வெளிநாட்டு மண்ணிலும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து தனது கேப்டன்ஷிப் திறமையை நிரூபித்துள்ளார்.

Rohith-1

அந்த வகையில் ஒரு சிறந்த கேப்டனாக அசத்திய ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 76* ரன்கள் குவித்தாலும் அடுத்த 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டியில் சொதப்பிய அவர் வரலாற்றில் இதுபோன்ற இருதரப்பு தொடர்களின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் சொந்த மண்ணை தவிர வெளிநாட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டது கிடையாது.

- Advertisement -

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சொந்த மண்ணில் நடந்த இருதரப்பு தொடர்களின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் இதோ:
1. 209, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2013
2. 4, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2013
3. 16, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2015
4. 70, நியூசிலாந்துக்கு எதிராக, 2016
5. 147, நியூசிலாந்துக்கு எதிராக, 2017
6. 7, இலங்கைக்கு எதிராக, 2017
7. 56, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2019
8. 63, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2019
9. 119, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2020
10. 37, இங்கிலாந்துக்கு எதிராக, 2021

rohith 1

இப்படி சொந்த மண்ணில் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டு 728 ரன்களை 72.80 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள அவருடைய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெளிநாட்டு மண்ணில் நடந்த இரு தரப்பு தொடர்களில் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளின் செயல்பாடுகள் இதோ:
1. 5, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2011
2. 2, இங்கிலாந்துக்கு எதிராக, 2018
3. 9, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2019
4. 17, இங்கிலாந்துக்கு எதிராக, 2022*

இதையும் படிங்க: IND vs ENG : இதுவரை கண்டிராத மோசமான சறுக்கலை சந்தித்த கோலி. 14 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் – முதல்முறையாம்

இப்படி வெளிநாட்டு மண்ணில் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளில் வெறும் 33 ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் எப்போதுமே இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை. இதுபோக 2015 உலகக்கோப்பை 2017 சம்பியன்ஸ் டிராபி 2019 உலகக்கோப்பை 2021 டி20 உலகக் கோப்பை என ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, துபாய் என வெளிநாடுகளில் நடந்த முக்கியமான ஐசிசி தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் ஒருமுறைகூட அவர் அரை சதம் அடிக்காததே அந்த தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

Advertisement