IND vs ENG : இதுவரை கண்டிராத மோசமான சறுக்கலை சந்தித்த கோலி. 14 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் – முதல்முறையாம்

Kohli
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய அந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளைப் பதிவு செய்ததால் 1 – 1* என சமநிலை அடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17-ஆம் தேதியான நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 45.5 ஓவர்களில் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Hardik Pandya 1

- Advertisement -

முகம்மது சிராஜ் வீசிய 2-வது ஓவரிலேயே ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் என 2 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய ஜேசன் ராய் 41 (31) ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 27 (29) ரன்களிலும் ஹர்திக் பாண்டியாவிடம் அவுட்டானார்கள். அதனால் 74/4 என தடுமாறிய அந்த அணிக்கு 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் பட்லருடன் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய மொயின் அலி 34 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் போராடிக்கொண்டிருந்த பட்லரும் அதிகபட்சமாக 60 (80) ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இந்தியா அசத்தல்:
அதை தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1 (3) கேப்டன் ரோகித் சர்மா 17 (17) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றி நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 (22) ரன்களிலும் காப்பாற்றுவார் என கருதப்பட்டு சூர்யகுமார் யாதவ் 16 (28) ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 16.2 ஓவரில் 72/4 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 35.3 ஓவர்கள் வரை ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்பு அதிரடியாகவும் பேட்டிங் செய்து 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்.

Rishabh Pant 125

இதில் 10 பவுண்டரியுடன் பாண்டியா 71 (55) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை அவுட்டாகாமல் 16 பவுண்டரி 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த ரிஷப் பண்ட் 125* (113) ரன்கள் குவித்து ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 261/5 (42.1) ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

சொதப்பிய கோலி:
முன்னதாக கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தினம்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் விராட் கோலி அதற்கு இந்த முக்கியமான போட்டியில் சதமடித்து முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவரை பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் இருப்பீர்கள் என்று கபில் தேவ் உட்பட நிறைய பேர் விமர்சித்ததுடன் அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Virat-Kohli

இருப்பினும் 70 சதங்களை அடித்து 20000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவருக்கு கிரேம் ஸ்வான், கெவின் பீட்டர்சன் உட்பட நிறைய வெளிநாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த சோதனை காலங்களிலும் இடையிடையே 40, 50 போன்ற ரன்களை அடித்து வரும் அவர் தனது தரத்திற்கேற்ப செயல்படவில்லையே தவிர பார்ம் அவுட் இல்லை என்று அவரது ரசிகர்கள் புள்ளிவிவரங்களை காட்டி வருகின்றனர்.

- Advertisement -

அட போங்கய்யா:
இவ்வளவு எதிர்ப்பையும் மீறி ஏராளமான ஆதரவையும் வாய்ப்புகளைப் பெற்று வரும் அவர் சமீப கால்ங்களில் அதற்கேற்றாற்போல் கணிசமான ரன்களைக் கூட அடிக்காமல் முன்பை விட மோசமாக செயல்படத் துவங்கியுள்ளது வேதனையாக அமைகிறது.

kohli

ஆம் தன்னுடைய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 8, 18, 0, 16, 17 என சொற்ப ரன்களில் அவுட்டான அவர் எந்த ஒரு போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை. கடந்த 2008இல் அறிமுகமாகி 14 வருடங்களில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ள விராட் கோலி தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் கேரியரில் இப்படி முதல் முறையாக தொடர்ச்சியாக 5 போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்ட முடியாமல் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த ஒருநாள் தொடரில் 16, 17 என வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் தனது கேரியரில் ஒரு தொடரில் 4-வது முறையாக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. 13, பாகிஸ்தானுக்கு எதிராக, 2012
2. 26, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2022
3. 31, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2013
4. 33, இங்கிலாந்துக்கு எதிராக, 2022*

இதையும் படிங்க: IND vs ENG : 39 வருடங்களுக்கு பின் வரலாற்று சாதனை வெற்றி – அசாருதீன், தோனி வரிசையில் சாதித்து காட்டிய ரோஹித் சர்மா

அத்துடன் 2022இல் 8 ஒருநாள் இன்னிங்ஸ்சில் வெறும் 2 அரைச் சதங்களுடன் 175 ரன்களை 21.87 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவரை பார்க்கும் ரசிகர்களுக்கு “அடப்போங்கய்யா அப்போ உண்மையாகவே பார்ம் அவுட் தானா” என்ற கேள்வி எழுகிறது.

Advertisement