நானா இருந்தா உலக கோப்பையிலிருந்து ரோஹித்தை வீட்டுக்கு அனுப்புவேன்.. நாசர் ஹுசைன் கோரிக்கை

nasser Hussain 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று பட்டியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு 90% உறுதியாகியுள்ளதால் 2011 போல கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய அணியில் விராட் கோலி, பும்ரா மட்டுமல்லாமல் பெஞ்சில் அமர்ந்திருந்து திடீரென வாய்ப்பு பெற்ற ஷமி கூட நல்ல ஃபார்மில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல துவக்கம் கொடுத்து அடுத்த வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கி வருகிறார்.

- Advertisement -

வீட்டுக்கு அனுப்புங்க:
மேலும் இந்த தொடரில் பவுலர்களை சரியாக பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களிலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் முடிவுகளிலும் சிறப்பாகவே இருந்து வருகிறது. எனவே இதே போல ஃபைனல் உட்பட அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகளிலும் ரோகித் தலைமையில் வெற்றி கண்டு இந்தியா கோப்பையை முத்தமிட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் ஆகிய 2 வேலைகளையும் சிறப்பாக செய்து வரும் ரோகித் சர்மாவுக்கு தற்போது சிறிய ஓய்வு தேவைப்படுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அதனால் தாம் ராகுல் டிராவிட்டாக இருந்தால் மும்பையில் இலங்கைக்கு எதிரான போட்டி நடைபெறும் சூழ்நிலையில் ரோஹித்தை சில நாட்கள் வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுத்து வருமாறு சொல்வேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு.

- Advertisement -

“சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் இருக்கும் ஒரு பயன் என்னவெனில் நீங்கள் வேலை செய்துக்கொண்டே அவ்வப்போது ஓய்வெடுத்து விளையாடலாம். குறிப்பாக ரோகித் சர்மா போன்றவர் அணிக்கு வெளியே சில நேரம் இருக்கலாம். தற்போது மும்பையில் இருக்கும் நீங்கள் வீட்டுக்கு சென்று குடும்பத்தை பார்த்து வாருங்கள். அது இந்த பெரிய தொடரில் அவருக்கு ஒரு சிறிய ஓய்வை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்”

இதையும் படிங்க: என்னது நான் ரஷீத் கானுக்கு 10 கோடி குடுத்தேனா? உண்மையை விவரத்தை கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – ரத்தன் டாடா

“ஏனெனில் நீங்கள் நீண்ட காலமாக அழுத்தத்தின் கீழ் விளையாடி வருகிறீர்கள். எனவே நான் ராகுல் டிராவிட்டாக இருந்தால் என்னுடைய சில வீரர்களிடம் இந்த உலகக் கோப்பையின் வளையத்தில் இருந்து சில நேரம் வெளியே சென்று ஓய்வெடுத்து வாருங்கள் என்று சொல்வேன்” என கூறினார். இந்த நிலையில் இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் நவம்பர் 2ஆம் தேதி இலங்கையை மும்பையில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement