என்னது நான் ரஷீத் கானுக்கு 10 கோடி குடுத்தேனா? உண்மையை விவரத்தை கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – ரத்தன் டாடா

Ratan-Tata-and-Rashid
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனெனில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையில் முதலில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்திய அந்த அணியானது அடுத்ததாக முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கை என அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருவது அனைவரது மத்தியிலும் பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த தொடரின் மிக முக்கிய 22-வது லீக் போட்டியில் அக்டோபர் 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. அதோடு உலக கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் என இருபெரும் அணிகளை வீழ்த்தியதற்காகவும் அவர்கள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டி முடிந்து ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி நடந்து வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர். இந்நிலையில் அப்படி மைதானத்தை சுற்றி வரும்போது ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இந்திய கொடியை ஏந்தி வலம் வந்தது போன்று ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும் இப்படி இந்திய கொடியை வைத்து ரஷீத் கான் மைதானத்தை சுற்றியதால் அவருக்கு 55 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், மேலும் இந்திய கொடியை வைத்து ரஷீத் கான் மைதானத்தை சுற்றியதால் அவருக்கு சன்மானமாக ரத்தன் டாடா 10 கோடி வழங்கியதாகும் சில பொய்யான தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ள ரத்தன் டாடா :

இதையும் படிங்க : எனக்கு அந்த லேங்குவேஜ் தெரியாதுன்னு நெனச்சி தப்பு கணக்கு போட்டுட்டாங்க. கலகலப்பான சம்பவத்தை பகிர்ந்த தோனி

எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் அபராதம் வழங்குவது தொடர்பாகவோ, சன்மானம் வழங்குவது தொடர்பாகவோ நான் ஐசிசி அல்லது எந்த கிரிக்கெட் நிர்வாகிகளுக்கும் பரிந்துரை செய்யவில்லை. எனக்கும் கிரிக்கெட்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது போன்று பொய்யாக செய்திகளை பரப்ப வேண்டாம். எனது அதிகாரபூர்வ தளத்திலிருந்து செய்தி வந்தால் மட்டுமே நம்புங்கள். மற்றபடி பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement