எனக்கு அந்த லேங்குவேஜ் தெரியாதுன்னு நெனச்சி தப்பு கணக்கு போட்டுட்டாங்க. கலகலப்பான சம்பவத்தை பகிர்ந்த தோனி

Dhoni
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐசிசி-யின் அனைத்து வகையான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை உடையவர். அதோடு இந்திய அணி இன்று இவ்வளவு பலமாக இருப்பதற்கு தனது மிகச் சிறப்பான கேப்டன்சி-யின் மூலம் தரமான வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்கி தந்து நல்ல நிலையை அடைய வைத்து ஓய்வு பெற்றவர். அதன் காரணமாக இன்றளவும் அவர் மீது ரசிகர்கள் அன்பைப் பொழிந்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தோனி இன்றளவும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகிறார். அதோடு என்னதான் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகள் நாள்தோறும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம் பல்வேறு சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு தோனியும் கலகலப்பான பதில்களை அளித்துள்ளது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் காரக்பூர் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்த போது பெங்காலி மொழியை சரளமாக பேசவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. தற்சமயம் நான் பெங்காலி பேசினால் சில தவறுகள் செய்யலாம். ஆனால் நான் காரக்பூரில் பணிபுரியும் போது பெங்காலி நன்றாகவே பேசினேன் நன்றாகவே புரிந்து கொண்டேன்.

- Advertisement -

அந்த வகையில் ஒருமுறை நான் வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்காக அங்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஒரு போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் எனக்கு பெங்காலி புரியும் என்று வங்கதேச வீரர்களுக்கு தெரியாது. எனவே எனக்கு எதிரான திட்டத்தை அவர்கள் பெங்காலிலேயே பேசிக்கொண்டனர். விக்கெட் கீப்பரும் பெங்காலியில் இவ்வாறு பந்து வீச வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க : ஃபிட்டாகாத பாண்டியா ரெஸ்ட் எடுகட்டும்.. வேணும்னா அவரை ட்ராப் பண்ணுங்க.. சோயப் அக்தர் கருத்து

எனக்கு அது முன்கூட்டியே தெரிந்துவிட்டது. எனவே அந்த பந்துகளை பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினேன். பின்னர் போட்டி முடிந்து எனது சிரிப்பை பார்த்த வங்கதேச வீரர்கள் இவருக்கு பெங்காலியும் புரியும் போல என்று அவர்களுக்குள் பேசியபடி அங்கிருந்து சென்றதாக தோனி சிரித்தபடியே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement