ஃபிட்டாகாத பாண்டியா ரெஸ்ட் எடுகட்டும்.. வேணும்னா அவரை ட்ராப் பண்ணுங்க.. சோயப் அக்தர் கருத்து

Shoiab Akhtar
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் அடுத்தடுத்து 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அந்த வகையில் சொந்த மண்ணில் வெற்றி நடை போடும் இந்தியா தங்களுடைய 7வது போட்டியில் தடுமாறி வரும் இலங்கையை மும்பை நகரில் எதிர்கொள்ள உள்ளது.

இருப்பினும் அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய முதன்மை ஆல் ரவுண்டரான அவர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்து வெளியேறிய காரணத்தால் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை.

- Advertisement -

நீக்கப்படுவாரா ஸ்ரேயாஸ் ஐயர்:
மறுபுறம் பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்களை எடுத்து 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் இந்தியா வெற்றி பெற உதவினார். அதே போல நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் பாண்டியா இல்லாத குறை தெரியாத அளவுக்கு மிரட்டி வருகிறார் என்றே சொல்லலாம்.

அதன் காரணமாக பாண்டியா வந்தாலுமே ஷமி விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் வேண்டுமானால் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் ஸ்ரேயாஸ் ஐயரை பெஞ்சில் அமர வையுங்கள் என்று சொல்வதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நாட் அவுட் சுற்று நெருங்கி வரும் நிலையில் 100% முழுமையாக குணமடையாமல் பாண்டியாவை விளையாட வைக்க வேண்டாம் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஷமி வந்துள்ளதால் இரக்கமற்றதாக மாறியுள்ள இந்திய பவுலிங் அட்டாக்கை கலைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் அவர் வேண்டுமானால் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்குங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 100 வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி பாராட்டுக்குரியது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஷமி, பும்ரா ஆகியோர் இங்கிலாந்தை மூச்சு விடாத அளவுக்கு திணறடித்தார்கள்”

இதையும் படிங்க: நவம்பர் 5 ஆம் தேதி விராட் கோலி களத்திற்கு வரும்போது வித்தியாசமாக வரவேற்க இருக்கும் ரசிகர்கள் – பலே ஏற்பாடு

“ஷமி வந்த பின் இந்திய பவுலிங் அட்டாக் இறக்கமற்றதாக மாறியுள்ளது. இந்த சமயத்தில் பாதி மட்டுமே ஃபிட்டாகியுள்ள ஹர்திக் பாண்டியா இந்திய பவுலிங் அட்டாக்கிற்கு சிறந்தவர் கிடையாது. ஏனெனில் அவருக்காக நீங்கள் ஒரு பவுலரை நீக்க வேண்டும். ஒருவேளை பாண்டியா வந்தால் நீங்கள் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்குங்கள். ஆனால் தற்போதைய பவுலிங் கூட்டணியை கலைக்காதீர்கள். இந்தியாவை நான் பாராட்டுவதற்காக சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் வெறும் 230 ரன்களை கட்டுப்படுத்தும் போது 100 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் அணியை நான் ஏன் பாராட்ட கூடாது? அவர்கள் அதற்கு தகுதியானவர்கள்” என்று கூறினார்.

Advertisement