நவம்பர் 5 ஆம் தேதி விராட் கோலி களத்திற்கு வரும்போது வித்தியாசமாக வரவேற்க இருக்கும் ரசிகர்கள் – பலே ஏற்பாடு

Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நடைபெற்று வரும் நடப்பு 50 உலகக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையிலே நடைபெற்று வரும் உலக கோப்பையில் அவர் பங்களாதேஷ் அணிக்கெதிராக சதமும் மற்ற அணிகளுக்கு எதிராக அரை சதங்களையும் அடித்து அட்டகாசமான முறையில் விளையாடி வருகிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இம்முறை முழுக்க முழுக்க இந்தியாவில் உலகக்கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் கோலியின் ஆட்டமும் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையிலேயே விராட் கோலி இந்த தொடர் முழுவதுமே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக நவம்பர் 2-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து நவம்பர் 5-ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் தற்போது 34 வயதான விராட் கோலி நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 35-வது பிறந்த நாளை கொண்டாட இருப்பதினால் தற்போதே விராட் கோலியின் அந்த பிறந்த நாளை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பது குறித்து பெங்கால் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலியின் 35-வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மைதானத்தில் கேக் வெட்டவும், போட்டியின் இடைவெளியில் லேசர் ஷோ மற்றும் வான வேடிக்கைகளை நிகழ்த்தவும் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தற்போது விராட் கோலியின் பிறந்தநாளை பிரத்தியேகமாக கொண்டாடும் வகையில் அந்த போட்டியை காண மைதானத்திற்கு வரும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு விராட் கோலியின் புகைப்படம் அமைந்த மாஸ்க் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன .

இதையும் படிங்க : 3 ஃபோர்.. 7 சிக்ஸ்.. 81 ரன்.. பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது அதிரடிக்கு காரணம் இதுதான் – பக்கர் ஜமான் பேட்டி

மேலும் விராத் கோலி பேட்டிங் செய்ய களத்திற்கு வரும்போது மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் அந்த மாஸ்க்கை அணிந்து விராட் கோலியை கோலாகமாக வரவேற்க உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முன்னேற்பாடுகளை கொல்கத்தா மைதான நிர்வாகம் செய்து வருகின்றன. எனவே நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த போட்டி பெரிய அளவில் தற்போதே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement