3 ஃபோர்.. 7 சிக்ஸ்.. 81 ரன்.. பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது அதிரடிக்கு காரணம் இதுதான் – பக்கர் ஜமான் பேட்டி

Fakhar-Zaman
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது அரையிறுதிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே குவித்தது. பங்களாதேஷ் அணி சார்பாக முகமதுல்லா 56 ரன்களையும், லிட்டன் தாஸ் 45 ரன்களையும், கேப்டன் சாஹிப் அல் ஹசன் 43 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக அப்துல்லா ஷபிக் 68 ரன்களும், பக்கர் ஜமான் 81 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த பக்கர் ஜமான் 74 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 81 ரன்கள் குவித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பக்கர் ஜமான் கூறுகையில் : ஆசிய கோப்பை தொடருக்கு பின்னர் நான் என்னுடைய பேட்டிங்கில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பெற்று என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி காத்திருந்தேன்.

- Advertisement -

அந்த வகையில் நான் எடுத்த கடின பயிற்சிகளுக்கெல்லாம் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் நான் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். முதல் சில ஓவர்களில் நாங்கள் பந்தினை பார்த்து மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்று கணித்து அதிரடியாக ஆட நினைத்தோம். அந்த வகையில் நான்கு ஓவர்களுக்கு பிறகு பெரிய ஷாட்களை விளையாட முடிந்தது. எங்களது அணியில் என்னுடைய ரோல் மிகவும் தெளிவாக இருக்கிறது.

இதையும் படிங்க : இப்போவும் கம்பேக் கொடுத்து அவங்க முகத்துல சிரிப்பை கொண்டு வருவோம்.. வெளியேறிய பின் சாகிப் பேட்டி

அதாவது நான் ரன் குவிப்பை வேகப்படுத்தி எதிரில் உள்ள வீரர்களை ப்ரீயாக அழுத்தமின்றி விளையாட வைக்க வேண்டும் என்பது மட்டும்தான். எனவே 100 ரன்களை கடந்த பிறகு நாங்கள் 30 ஓவருக்குள் போட்டியை முடிக்க நினைத்து அதிரடியாக விளையாடினோம். கடந்த காலங்களில் எனக்கு நிறைய பேட்டிங் தோல்விகள் இருந்திருக்கின்றன. ஆனால் இனிவரும் போட்டிகளில் நான் பெரிய ஸ்கோரை அடிக்க விரும்புகிறேன் என ஆட்டநாயகன் பக்கர் ஜமான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement