3 போட்டிகளில் 490 ரன்கள் தேவை.. இந்த தொடரிலேயே சாதிப்பாரா? ஹிட்மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான கம்பேக் கொடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 22 ரன்கள் சராசரியுடன் 90 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அவரது இந்த பேட்டிங் பார்ம் வருத்தம் அளிக்கும் விடயத்தில் இருந்தாலும் அடுத்த மூன்று போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக மாபெரும் சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3828 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 262 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10709 ரன்களை குவித்துள்ளார். மேலும் 151 டி20 போட்டிகளில் விளையாடி 3974 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இப்படி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து ரோகித் சர்மா 18,511 ரன்கள் குவித்துள்ள வேளையில் எஞ்சியுள்ள இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 490 ரன்களை குவிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 19000 ரன்களை தொட்ட நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்ல.. 44 வயதில் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான சாதனையை நிகழ்த்திய – இம்ரான் தாஹீர்

இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 20,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த பட்டியலில் தற்போது ரோகித் சர்மாவும் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் அவர் 19000 ரன்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் ஐபிஎல் தொடருக்கு பின்னர் வரை அவர் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement