சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்ல.. 44 வயதில் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான சாதனையை நிகழ்த்திய – இம்ரான் தாஹீர்

Tahir
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை 35 வயதை கடந்து விட்டாலே அவர்கள் வயதான வீரர்கள் என்று முத்திரை குத்தப்படுவது வழக்கம். ஆனால் ஒரு சில வீரர்கள் 40 வயதை கடந்தும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தனது 32-வது வயதில் அறிமுகமான இம்ரான் தாஹீர் தற்போது தனது 44-ஆவது வயதில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக முதல்தர கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் இம்ரான் தாஹீருக்கு கடந்த 2011-ம் ஆண்டு தனது 32-ஆவது வயதில் தான் தென்னாப்பிரிக்க தேசிய அணியில் விளையாட இடம் கிடைத்தது.

- Advertisement -

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்காக அவர் 20 டெஸ்ட் போட்டிகள், 107 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அவரது திறமைக்கு முன்கூட்டியே தென்னாப்பிரிக்க அணியில் விளையாடியிருந்தால் ஆயிரக்கணக்கில் விக்கெட்டை வீழ்த்தி இருப்பார் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியில் ஒரு கீ பவுலராக இருந்தவர். இந்நிலையில் தற்போது 44 வயதாகியுள்ள இம்ரான் தாஹீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் குல்னா டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் மாபெரும் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

இதையும் படிங்க : என்னா மனசுய்யா.. குட்டி ரசிகருக்கு டேவிட் வார்னர் கொடுத்த மெகா பரிசு.. ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன்

அவர் எடுத்த இந்த 5 விக்கெட்டுகளின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேன் மட்டுமே 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருக்கும் வேளையில் தற்போது நான்காவது வீரராக இம்ரான் தாஹீர் 44 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement