என்னா மனசுய்யா.. குட்டி ரசிகருக்கு டேவிட் வார்னர் கொடுத்த மெகா பரிசு.. ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது.

இத்தொடரில் 3 போட்டிகளில் 173 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் தொடர்நாயகன் விருதை வென்றார். கடந்த 10 வருடத்திற்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி 2015, 2023 உலகக் கோப்பை போன்ற ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

மெகா பரிசு:
மேலும் 2024 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 ஓவர் போட்டிகளில் இருந்தும் அவர் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச டி20 கேரியரில் கடைசி முறையாக தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்று தன்னுடைய தரத்தை நிரூபித்தார்.

அதன் காரணமாக தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா என்று 3வது போட்டியின் முடிவில் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு நான் விளையாடி முடித்து விட்டேன் இது இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்கான நேரம் என டேவிட் வார்னர் வெளிப்படையாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நமது வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர். ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெறும் நியூஸிலாந்து தொடருக்காக எனக்கு நிறைய நேரம் உள்ளது”

- Advertisement -

“அதன் பின் டி20 உலகக் கோப்பைக்காக தயாராக உள்ளேன். நான் நன்றாக செய்தாலும் விளையாடி முடித்து விட்டேன். நம்மிடம் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இது அவர்கள் தங்களுடைய வேலையை செய்வதற்கான நேரமாகும்” என்று கூறினார். அப்படி பேசி முடித்து விட்டு உடை மாற்றும் அறையை நோக்கிச் சென்ற அவரிடம் ஆட்டோஃகிராப் வாங்குவதற்காக நிறைய இளம் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதையும் படிங்க:ஆஃப் சைடில் அசத்தும் அவர் 10 வருஷத்துல.. தாதா கங்குலி மாதிரி வருவாரு.. இர்பான் பதான் நம்பிக்கை

அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த வார்னர் அங்கிருந்த ஒரு குட்டி ரசிகருக்கு தன்னுடைய தொடர்நாயகன் விருதை அப்படியே பரிசாக கொடுத்து விட்டு சென்றார். இதற்கு முன் பேட், க்ளவுஸ் போன்ற உபகரணங்களை ரசிகர்களுக்கு பல்வேறு வீரர்கள் பரிசாக கொடுத்துள்ளதை பார்க்கிறோம். ஆனால் இங்கு தம்முடைய சொந்த மண்ணில் கடைசி முறையாக கிடைத்த தொடர்நாயகன் விருதையே பரிசாக கொடுத்த வார்னரின் செயலை பார்க்கும் ரசிகர்கள் “என்னா மனசுய்யா” என்று பாராட்டி வருகின்றனர்.

Advertisement