
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளிலி இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தார்.
ஆனாலும் அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடைசியாக ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று அசத்தியிருந்தது.
இந்நிலையில் அதற்கடுத்து ஐந்து மாதங்களாக எவ்வித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத அவர் தற்போது வெளியாகியுள்ள ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஐந்து மாதங்களாக ஒருநாள் போட்டிகள் பங்கேற்காத ஒருவர் எப்படி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தவறவிட்டது.
இந்த தொடர் முழுவதுமே 3 போட்டிகளில் விளையாடிய பாபர் அசாம் வெறும் 56 ரன்கள் மட்டுமே குவித்ததால் அவர் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு சரிந்துள்ளார். அதன் காரணமாகவே மூன்றாம் இடத்திலிருந்த ரோகித் சர்மா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதையும் படிங்க : என் பெயர் பேபி ஏபிடி கிடையாது.. இதை செஞ்சு பெயர் வாங்குறதே என் இலக்கு.. தெ.ஆ வீரர் ப்ரேவிஸ் பேட்டி
அதேபோன்று விராட் கோலி நான்காவது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் எட்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இப்படி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் டாப் 10-ல் நான்கு இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.