மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகவுள்ள ரோஹித் சர்மா.. அடுத்ததாக விளையாடவுள்ள அணி எது?

Rohit
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

மேலும் இந்த தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுமே பலம்வாய்ந்த அணிகள் என்பதால் எந்த அணி எப்போது வெற்றி பெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரானது ஆரம்பத்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறும் குழுப்பங்கள் நீடித்து வருகிறது.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் பெரியளவில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்த வேளையில் மும்பை அணி செல்லும் இடங்களில் எல்லாம் அவமானத்தை சந்தித்து வருகிறது.

ஒருபுறம் மும்பை அணி தோல்வியை சந்தித்து வரும் வேளையில் மறுபுறம் ஹார்டிக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்த தவறு என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேறி வேறு அணியில் விளையாடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : தற்போது பாண்டியாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவிற்கு பிடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் முடிந்தவுடன் மெகா ஏலத்திற்கு செல்லும் ரோகித் சர்மா வேறு அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அவரை மாதிரி தங்கமான பிளேயரை எதுக்கு கழற்றி விட்டா எப்படி ஜெயிக்க முடியும்.. ஆர்சிபி மீது வாட்சன் அதிருப்தி

கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா தற்போது மும்பை அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வேறு அணிக்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement