ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கை சமநிலை வகிக்கின்றனது.
அதனைத்தொடர்ந்து நாளை பிப்ரவரி 15-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ரோகித் சர்மா 22 ரன்கள் சராசரியுடன் 90 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால் மூன்றாவது போட்டிக்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார்.
ஏற்கனவே இந்திய அணியில் விராட் கோலி, கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இல்லாத வேளையில் மிடில் ஆர்டரில் அனுபவம் இல்லாத அணியை கொண்டு களமிறங்க இருப்பதினால் ரோகித் சர்மா சற்று கூடுதலாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆனாலும் வலைப்பயிற்சியின் போது நெட் பவுலர் வீசிய பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ரோஹித் சர்மா பேட்டிங்கில் தடுமாறியதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்திய மண்ணில் 61 ரன்கள் சராசரி வைத்திருந்தும் தற்போது இங்கிலாந்து தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார்.
அதோடு ரோகித் சர்மா இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்க தொடரிலும் ரன்களை குவிக்கவில்லை. மேலும் தற்போது 36 வயதை எட்டியுள்ள ரோஹித் சர்மா ஏற்கனவே இந்திய மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை தவற விட்டதால் அவரது கேப்டன்ஷிப் மீது ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரிலும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் அவர் பேட்டிங் சரியாக செய்யாமல் இந்திய அணி ஒருவேளை தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்த தொடருக்கு பின்னதாக ரோகித் சர்மாவை கழட்டிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : எனக்காக கோடிகளை வேணாம்ன்னு சொன்னாரு.. 2019 உலகக் கோப்பையில் தோனியின் நன்றியை பகிர்ந்த சோமி கோலி
ஏனெனில் இந்த தொடர் முடிந்து ஐபிஎல் தொடர் அதற்கடுத்து டி20 உலககோப்பை தொடர் என அடுத்த பலமாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளே இல்லாத வேளையில் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க பல மாதங்கள் ஆகும் என்பதனால் நிச்சயம் அதனை அவர்கள் கணக்கில் கொண்டு பும்ராவை கேப்டனாக நியமித்து ரோஹித் சர்மாவை கழட்டி விட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.